வரும் திங்கட்கிழமை மருத்துவ நிபுணர் குழுவுடன்
முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
சென்னையில்
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருவதால் சென்னையில் முழு
ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
தமிழக
வணிகர் சங்கத் தலைவர் இதுகுறித்து கூறும்போது சென்னையில் 15 நாட்கள் முழு ஊரடங்கு
அமல்படுத்தினால் கூட வணிகர்கள் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக அறிவித்தார்.
இந்த
நிலையில் சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று
தீத்து சொல்லியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், இபாஸ் வழங்கும்
பணிகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நாளை மறுநாள் (15/6/2020)
காலை 11 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
மேற்கொள்ளவுள்ளார்.
எப்போது
மருத்துவ குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப ஊரடங்கு குறித்து முடிவுகளை எடுக்கும்
முதல்வர் தற்போதும் இதன் பின்னர் தனது முடிவுகளில் மாற்றம் செய்வரா என
எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக