குடிபோதையில் மீனை உயிருடன் விழுங்கிய
இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்
மாநகராட்சி, காலேகுண்டா தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருக்கு திருமணமாகி
இரண்டரை வயதில் ஆண் குழந்தையும், 7 மாத கர்ப்பிணி மனைவியும் உள்ளார். இந்நிலையில்,
வெற்றிவேல், உயிரோட உள்ள மீனை விழுங்க போவதாகவும், நண்பர்களை வீடியோ எடுக்குமாறும்
கூறியுள்ளார்.
இதையடுத்து, வெற்றிவேல் மீனை
உயிருடன் விழுங்கிய போது, அந்த மீன் அவரது சுவாச குழாயில் சிக்கியது.
இதனையடுத்து, வெற்றிவேல் மூச்சு விட முடியாமல் மயங்கி விழுந்துள்ளார். அவரை ஓசூர்
அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் போது அவர் பரிதாபமாக
உயிரிழந்துள்ளார்.
டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு அதிக
லைக்குகளை பெற வேண்டும் என, குடிபோதையில் வெற்றிவேல் செய்த விளையாட்டான காரியம்
விபரீதமாக முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக