Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 13 ஜூன், 2020

இந்தியாவில் மாருதி சுசுகி செலிரியோ பிஎஸ்6 எஸ்-சிஎன்ஜி கார் அறிமுகமானது... ஆரம்ப விலை ரூ.5.61 லட்சம்.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, செலிரியோ ஹேட்ச்பேக் மாடலின் எஸ்-சிஎன்ஜி வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. செலிரியோ மாடலின் இந்த புதிய வேரியண்ட்டை பற்றிய விரிவான தகவல்களை இனி பார்ப்போம்.

புதிய மாசு உமிழ்வு விதியினால் பிஎஸ்6 தரத்தில் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ள செலிரியோ எஸ்-சிஎன்ஜி மாடலின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.5.61 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஹேட்ச்பேக் காரின் பெட்ரோல் வேரியண்ட்களுடன் ஒப்பிடும்போது ரூ.81,000 அதிகமாகும்.

இந்த அறிமுகத்தின் மூலம் செலிரியோ மாடலின் விஎக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ(ஒ) என்ற மிட்-ஸ்பெக் வேரியண்ட்கள் சிஎன்ஜி என்ஜின் தேர்வை பெற்றுள்ளன. இந்த இரு வேரியண்ட்கள் மட்டுமின்றி பொது பயன்பாட்டிற்கு அதிகம் பயன்படுத்தப்படும் செலிரியோ டூர் வேரியண்ட்டும் இனி சிஎன்ஜி என்ஜின் உடன் விற்பனைக்கு கிடைக்கும்.

கூடுதல் என்ஜின் தேர்வை தவிர்த்து இந்த ஹேட்ச்பேக் காரில் வேறெந்த மாற்றங்களும் கொண்டுவரப்படவில்லை. இதனால் பெட்ரோல் வெர்சன்களில் கொண்டிருந்த வசதிகள் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்களுடன் தான் புதிய சிஎன்ஜி ட்ரிம்களும் விற்பனை செய்யப்படவுள்ளன.

அதேபோல் வழக்கமான பிஎஸ்6 1.0 லிட்டர் என்ஜினை தான் புதிய செலிரியோ சிஎன்ஜி வெர்சனும் ஏற்றுள்ளது. இந்த என்ஜின் மாருதியின் இந்த ஹேட்ச்பேக் காரின் பெட்ரோல் வேரியண்ட்களில் 68 பிஎச்பி மற்றும் 90 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தியது.

ஆனால் புதிய சிஎன்ஜி வெர்சனிற்கு அதிகப்பட்சமாக 58 பிஎச்பி மற்றும் 79 என்எம் டார்க் திறனை வழங்கும். ட்ரான்ஸ்மிஷனிற்கு இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மாருதி செலிரியோ ஹேட்ச்பேக் மாடலில் முன் மற்றும் பின் பக்கத்தில் பவர் ஜன்னல்கள், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், இரட்டை முன்புற காற்றுப்பைகள், ஏபிஎஸ் ப்ரேக் சிஸ்டம், ரிவர்ஸ் பார்கிங் சென்சார்கள், ஹை-ஸ்பீடு அலார்ட், ஓட்டுனர் மற்றும் முன் பயணிகள் சீட்பெல்ட் அணியாததை நினைவூட்டும் வசதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட்டை லேட்டஸ்ட் ஆக பெற்றுள்ள மாருதி மாடலாக செலிரியோ விளங்குகிறது. இதன் சிஎன்ஜி வெர்சனிற்கு விற்பனையில் போட்டியினை அளிக்க ஹூண்டாய் சாண்ட்ரோ சிஎன்ஜி மாடல் உள்ளது. முன்னதாக மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர், ஆல்டோ மற்றும் எர்டிகா கார்களும் சிஎன்ஜி தொழிற்நுட்பத்தை பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக