Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 3 ஜூன், 2020

பொன்னியின் செல்வனுக்கு முன் ரோஜா 2 இயக்குகிறாரா மணிரத்னம்?

தாய்லாந்தில் இதன் முதற்கட்ட ஷூட்டிங் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அடுத்த கட்ட ஷூடிட்ங்கிற்காக இந்தியா திரும்பியது படக்குழு. அடுத்தகட்ட ஷூட்டிங் பாண்டிச்சேரி உளளிட்ட இடங்களில் நடைபெற்றது.

அதன் பின் கொரோனா லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. கொரோனா லாக் டவுன் முடிந்தபிறகு தான் அடுத்த கட்ட ஷூட்டிங் நடைபெறும் என தெரிகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்பே மணிரத்னம் ஒரு சிறிய பட்ஜெட் படத்தை இயக்குகிறார் என செய்தி கடந்த சில தினங்களாக பரவி வருகிறது. தற்போதைக்கு அரசு ஷூட்டிங் நடத்த அனுமதி அளித்தாலும் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கை துவங்க பல தடங்கல்கள் இருக்கும். பிரம்மாண்டமாக பல ஆயிரம் நபர்கள் கொண்டு ஷூட்டிங் நடத்த அனுமதி கிடைக்காது என்பதால் தான் இந்த முடிவு என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் இந்த சிறிய பட்ஜெட் படம் ரோஜா படத்தின் இரண்டாம் பாகம் என்றும், அதில் அரவிந்த் சாமி நடிக்கிறார் என்றும் தகவல் பரவி வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்ப்பார்ப்பு எழுந்து உள்ளது. ஆனால் மணிரத்னம் தரப்பு இது முற்றிலும் வதந்தி என கூறியுள்ளனர்.

ரோஜா படம் 1992ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்தது. மது, அரவிந்த் சாமி உள்ளிட்டவர்கள் நடித்து இருந்த அந்த படத்திற்கு தேசிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இந்த படம் மூலமாகத்தான் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. பாடல்கள் பெரிய ஹிட் ஆன நிலையில் அவருக்கு பல விருதுகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் படத்தினை இரண்டு பாகங்களாக எடுக்க உள்ளதாக மணிரத்னம் முன்பே கூறி இருந்தார். அவரது கனவு படமான இதை எடுக்க பல்வேறு முயற்சிகளை இதற்கு முன்பு மேற்கொண்டிருந்தாலும். லைகா நிறுவனம் இதை தயாரிக்க முன்வந்த பிறகு தான் பொன்னியின் செல்வன் உருவாக்கும் கனவு அவருங்கு நிறைவேறி உள்ளது.

தற்போது கொரோனா அச்சுறுத்தலால் சினிமா துறை முற்றிலும் முடங்கி உள்ள நிலையில் சினிமா நடிகர்கள் தங்களின் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார் மணிரத்னம்

சமீபத்தில் ஒரு வெபினாரில் பேசிய அவர் "தற்போது தியேட்டர் ரிலீஸ் என்பது கடினமாகி உள்ளது. அதனால் மார்க்கெட் பெரிய பாதிப்பை சந்தித்துளளது. அதனால் எடுக்கப்படும் படங்களின் பட்ஜெட்டையும் குறைக்க வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது. அதனால் அதிக பட்ஜெட் படத்தில் நடிக்கும் பெரிய நட்சத்திரங்கள் மற்றும் டெக்னிஷியன்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு தங்களது சம்பளத்தை குறைத்து தயாரிப்பாளர்களுக்கு உதவ வேண்டும். அரசிடம் இருந்து உதவி எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது" என தெரிவித்தார்.

பொன்னியின் செல்வன் படத்தை பற்றி பேசிய அவர், 10வது நூற்றாண்டில் நடப்பது போல படம் இருக்கிறது என்பதால் பல காட்சிகளை படமாக்க அதிக நபர்கள் தேவை படுவார்கள். இருப்பினும் தொழில்நுட்பம் தற்போது அதிக அளவில் உதவி செய்கிறது என்றும் அந்த ஆன்லைன் கருத்தரங்கில் பேசினார் மணிரத்னம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக