Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 3 ஜூன், 2020

‘மாதம் ரூ.10,000...3 மாதங்களுக்கு இலவச மளிகை பொருட்கள்...வட்டி ரத்து’

கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் பொது முடக்கத்தை அறிவித்துள்ளன. இதனால், பொது மக்களின் பொருளாதாரம் வாழ்வாதரம் உள்ளிட்டவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் எழைகளும், நடுத்தர வர்க்க மக்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நெருக்கடியில் இருக்கிறார்கள்.
தங்களில் பெரும்பான்மையான மக்கள் தினக்கூலி வேலை செய்பவர்கள், சிறு, சிறு தொழில் செய்து பிழைப்பவர்கள் என தெரிவித்துள்ள சென்னையை சேர்ந்த பொது மக்கள், பொது முடக்கத்தால் இரண்டு மாதங்களாக வீட்டினுள்ளேயே முடங்கி கிடப்பதால் தங்களது தினசரி வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய் தொற்றால் அடையும் பாதிப்பை விட பசியாலும், பட்டினியாலும் அதிக துன்பத்தை அடைவதாக அந்த கடித்ததில் குறிப்பிட்டுள்ள அவர்கள், தமிழக அரசு கொடுத்த ரூ.1,000 குறைந்தபட்சம் இரண்டு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கே போதாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சென்னை பொது மக்களின் கோரிக்கைகள்

* ஒரு குடும்பத்தின் உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான மளிகை பொருட்களை மூன்று மாதங்களுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும்.

samayam tamil
கடிதம் எழுதியுள்ள மக்கள்

* அனைவருக்கும் தேவையான முககவசங்கள் மற்றும் கிருமி நாசினிகள் இலவசமா வழங்கப்பட வேண்டும்.

* வங்கி கடன்களுக்கான வட்டி வசூல் மற்றும் வட்டி இல்லாமல் தவணை வசூலையும் அடுத்த மூன்று மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகள் சரியான நேரத்தில், துரிதமாக செயல்படுத்தப்பட்டு விரைவாக தங்களது துயர் நீக்கப்படும் என்ற நம்பிக்கையோடு கோரிக்கை மனுவை அனுப்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக