Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 16 ஜூன், 2020

"இந்த செய்தியை 20 பேருக்கு பகிராவிட்டால் கெட்டது நடக்கும்" இது பின்னால் உள்ள மர்மம் என்ன?

samayam tamil
உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படத்தை வைத்து பரப்பப்பட்ட வதந்தியை பற்றி முழுமையாக பார்க்கலாம் வாருங்கள்.

ஒரு உண்மை சம்பவத்தையும் அதை தொட்டும் வரும் கட்டுக்கதைகளையும் வைத்து எடுக்கப்பட்ட படத்தின் காட்சிகளை வைத்து சிலர் வாட்ஸ் அப்பில் இதை பகிராவிட்டால் கெட்டது நடக்கும் என பகிர்ந்துவிட்டனர். இது பல நாடுகளை தாண்டி பல ஆண்டுகளாக பகிரப்பட்டு வருகிறது., அந்த பகிர்வுகளை பற்றிய உண்மையை கீழே காணுங்கள். 

வாட்ஸ் அப் பார்வேர்டு
 
samayam tamil இன்று நம்மில் பலருக்கு ஒரு வாட்ஸ் அப் அல்லது எஸ்எம்ஸ் பார்வேர்டு மெசெஜ் வரும். அதில் சாய்பாபா படமோ அல்லது வேறு ஏதாவது ஒரு படமோ இருக்கும். அந்த புகைப்படத்தையும் மெசெஜையும், இத்தனைப்பேருக்கு போர்வேர்டு செய்தால் நல்லது நடக்கும், இல்லாவிட்டால் கெட்டது நடக்கும். இதை பார்வேர்டு செய்யாமல் விட்டவருக்கு இது நடந்தது. பார்வேர்டு செய்தவர்களுக்கு நல்லது நடந்தது என்று எல்லாம் அதில் எழுதியிருக்கும்.

ஏன் செய்கிறார்கள்?

samayam tamil இப்படியான மெசெஜை பலர் பார்வேர்டு செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். இதை உருவாக்கியது யார் என்று யாருக்குமே தெரியாது. அந்த மெசெஜ் ஒருவர் மாறி ஒருவருக்குச் சென்று கொண்டேயிருக்கும் இதை எல்லாம் ஏன் செய்கிறார்கள் எதற்குச் செய்கிறார்கள். இதனால் அவர்களுக்கு என்ன கிடைக்கிறது என யாருக்கும் எதுவும் தெரியாது.

teresa.jpg

samayam tamil இப்படியாக கடந்த 2014ம் ஆண்டு வைரலான பார்வேர்டு மெசெஜ் தான் தெரசா ஃபிடல்கோ. இந்த பெயர் அன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலம். இந்த பார்வேர்டு மெசெஜில் "சாரி இதை நான் அனுப்பித்தான் ஆக வேண்டும் இப்பொழுது இந்த மெசெஜை திறந்துவிட்டீர்கள். படிக்கவும் துவங்கிவிட்டீர்கள் இனி நிறுத்தாதீர்கள். நான் 27 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டேன். இதை நீங்கள் உங்கள் 20 நண்பர்களுக்கு அனுப்பாவிட்டால். நான் இன்று இரவு நீங்கள் தூங்கும் போது உங்கள் பக்கத்தில் வந்து படுத்துக்கொள்வேன். நம்பவில்லை என்றால் தெரசா ஃபிடல்கோ என தேடிபாருங்கள். அதனால் உடனே இதைஉங்கள் நண்பர்கள் 20 பேருக்கு அனுப்புங்கள். இதை ஒரு பெண் அனுப்பாமல் விட்டுவிட்டார் அவரது தாய் 20 நாட்கள் கழித்து இறந்துவிட்டார். அதனால் நீங்கள் உடனடியாக இதை பகிருங்கள்" என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும்.

அதிக பயம்

samayam tamil இந்த மெசெஜ் உலகம் முழுவதும் அன்று வேகமாகப் பரவியது. பல நாடுகளில் இந்த ஒரே மெசெஜ் பலருக்கு வந்தது. அவர்கள் தெரசாவிற்கு பயந்து மற்றவர்களுக்கு பார்வேர்டு செய்தனர். அவர்களும் அதை படித்து பயந்து பார்வேர்டு செய்தனர். கிட்டத்தட்ட இன்டர் நெட் உலகில் மக்கள் அதிகம் பயந்தது தெரசாவிற்காகதான் இருக்கும் என்கிற அளவிற்கு வைரலானது.

உண்மை சம்பவம்

samayam tamil இது வைரலானது முக்கியமான காரணம் அந்த மெசெஜிலிருந்த தெரசா ஃபிடல்கோ என்ற பெயரை பலரும் கூகுள் செய்து பார்த்ததன் விளைவு தான். அதில் அமெரிக்காவிலிருந்த ஒரு பெண்ணிற்கு நேர்ந்த சம்பவத்தைப் பற்றி செய்தி தான் அப்படி என்ன நடந்தது அந்த பெண்ணிற்கு வாருங்கள் காணலாம்.

அனா மேரி 

samayam tamil 1900களில் அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் வாழ்ந்த சிறுமி அனா மேரி, இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் பயின்று வந்தார். அமெரிக்காவில் ஆண்டு தோறும் பற்றுகளில் நம்மூரில் ஆண்டு விழாக்கள் நடப்பது போல அங்கே பால் கல்சுரல் நடக்கும் அதில் பள்ளியில் படிக்கும் ஆண் பெண் என அனைவரும் டான்ஸ் ஆடி பார்ட்டி செய்வார்கள். இது அந்நாட்டில் வழக்கம் தான்.

1.30 மணி

samayam tamil இந்த சிறுமி அந்த பார்ட்டிக்கு செல்ல மேரி தனது தந்தையிடம் அனுமதிகேட்கிறார். அவரும் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி தர மேரியும் அழகாக தயாராகி குறிப்பிட்ட அந்த பார்ட்டிக்கு செல்கிறார். அங்குக் கொண்டாட்டங்களை எல்லாம் முடித்துவிட்டு மறுநாள் ஹாலோவின் டே அன்று அதிகாலை 1.30 மணிக்கு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

விபத்து

samayam tamil அந்த கார் ஒரு கல்லறை இருக்கும் பகுதியை தாண்டி செல்லும் போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்குகிறது. கார் ஒரு பள்ளத்தில் கவிழந்துவிட்டது. இதில் காரிலிருந்த மேரி முன் பக்க கண்ணாடி உடைத்துக்கொண்டு விபத்தில் சிக்கி பலியாகிவிட்டார்.

புகார்

அப்பொழுது இந்த விபத்து நடந்தது அக்கம் பக்கத்தில் யாருக்கும் தெரியவில்லை. இரவு சொன்ன நேரத்தையும் கடந்ததால் மேரியின் தந்தைக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. இதனால் அவர் ஒரு கட்டத்தில் போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்று புகார் அளித்தார்.
மீட்பு
மறுநாள் காலையில் இப்படி ஒருவிபத்து நடந்தது வெளியில் தெரிந்தது. அதில் அந்தகரிலிருந்த மேரியின் உடலையும் அந்த கார் டிரைவரின் உடலையும் போலீசார் எடுத்தனர். அப்பொழுது மேரி வீட்டின் அக்கம் பக்கத்தினர் மேரி குறித்து தவறாகப் பேசியதாகத் தெரிகிறது.
அடக்கம்
இந்நிலையில் மேரியின் உடலை புதை அவர்கள் கல்லறை நிர்வாகத்தைத் தொடர்பு கொண்ட போது அவர்கள் கல்லறை பணியாளர்கள் எல்லாம் தற்போது ஸ்டிரைக்கில் உள்ளதால் அங்குப் புதைக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி மேரியின் தந்தை மேரியின் உடலை அவரது வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்திலேயே புதைத்துள்ளார்.
நல்லடக்கம்
பின்னர் சில நாட்கள் கழித்து ஸ்டிரைக் முடிந்ததும் மேரியின் உடலை எடுத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையில் மேரியை பலர் தவறானவள் என்றும், பலர் பல விதமாக பேசியுள்ளார். இதனால் கடும் கோபத்திலிருந்த அவரது தந்தை அவரது கல்லறை அமைக்கப்பட்ட போதுஅதில் மேரியை தவறாக பேசிவர்களே மேரியே வந்து பழி வாங்குவாள் என சபதம் செய்தார்.
மரணம்
அதன் பின் அந்த பகுதியில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அவளுக்கு எதார்த்தமாக மேரி என பெயர் வைக்க அந்த குழந்தை வளர்ந்து 12 வயதை எட்டியபோது அந்த குழந்தை முதலில் மேரி விபத்தில் சிக்கிய அதே இடத்தில் இவளும் ஒரு கார் விபத்தில் சிக்கினார். அதில் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.
பேய்
இப்பொழுது அந்த பகுதி மக்களுக்கு ஒரு பயம் தொற்றிக்கொள்ளுகிறது. மக்கள் எல்லாம் முதலில் இறந்த மேரி தான் இந்த சிறுமியைக் கொலை செய்துள்ளார் என நம்ப வைத்தது இதனால் மேரி ஒரு பேய் என்ற ரீதியில் பலர் பேசினர். இது நாளடைவில் சிறு குழந்தைகளைக் கூட மேரி பேய் பிடித்துக்கொண்டு போகும் என்கிற அளவிற்கு வைரலாக பரவியது.
லிப்ட்
இந்த கதை பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது. பலர் பல விதமாக இந்த கதைகளைப் பேசினர். சிலர் மேரி இரவு நேரங்களில் பேயாக வந்து இன்று லிப்ட் கேட்பதாக கதைகள் சொல்லுகின்றனர். இந்த கதைகளை எல்லாம் கேள்விபட்ட போர்த்திகீஷிய இயக்குநர் ஒருவர் ஒரு திரைப்படத்தை எடுக்க விரும்பினார்.
வைரல்
கிட்டத்தட்ட மேரியின் இந்த கதையை வைத்து அவர் எடுத்த திரைப்படம் தான் தெரசா ஃபிடல்கோ என்ற திரைப்படம் வெளியானது. இந்த கதைதான் தெரசா ஃபிடல்கோ கதை என யாரோ வாட்ஸ் அப் எஸ்எம்எஸ் என உலாவ விட்டுள்ளனர். இதுதான் மிகப்பெரிய அளவில் வைரலாகியுள்ளது.
திரைப்படத்தின் கதை
அந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட வீட்டை சுற்றி ஆண்கள் இரவு நேரத்தில் காரில் தனியாக வரும் போது ரோட்டில் அழகான ஆடை அணிந்து ஒரு பெண் முகத்தில் சிரிப்பு இல்லாமல் ஒரு வித பயத்துடன் லிப்ட் கேட்கிறார். அவருக்கு லிப்ட் கொடுப்பவர்களிடம் நன்றாக பேசும் அந்த பெண் ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் காரை நிறுத்த சொல்கிறார்.
மேரி சபதம்
அவர் காரை நிறுத்தியதும் இங்கு தான் நான் 27 மாதங்களுக்கு முன்பு இறந்து போனேன் அதனால் என்னை இங்கே இறக்கி விடுங்கள் என சொல்லிவிட்டு காரில் உள்ள அந்த ஆணை கொலை செய்கிறார். அவர் கொலை செய்பவர்கள் எல்லாம் அவர் இறந்த போது அவளைப் பற்றி தவறாகப் பேசிய ஆண்கள். அதாவது மேரி கதையில்ல அவர் தந்தையின் சபதம் நிறைவேறுகிறது என படம் எடுக்கப்பட்டது.
சுற்றலில் உள்ளது
இந்த படத்தில் உள்ள காட்சிகளையும் புகைப்படங்கள், அந்த திரைப்படத்தின் பேயின் பெயர் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி தான் குறிப்பிட்ட இந்த பார்வேர்டு மெசெஜ் அதிகமாக பகிரப்படுகிறது. இன்றும் அந்த மெசெஜ் சுற்றலில்தான் உள்ளது.
தீராத மர்மம்

அதனால் இது போன்ற மெசெஜ்கள் உங்களுக்கு வந்தால் அதை பார்வேர்டு செய்யாமல் பேசாமல் இருப்பதே நல்லது. அதனால் எதுவும் ஆகப்போவதில்லை. இதே போல் தான் கடவுளின் புகைப்படத்தை பகிர்ந்து பலருக்குப் பகிரச் சொல்வது, உள்ளிட்ட பல மெசெஜ்கள், உங்களுக்கு வரும் மெசெஜ்கள் உங்களுக்கு உண்மை என 100 சதவீதம் தெரிந்தால் மட்டுமே மற்றவர்களுக்கு அனுப்புங்கள் இல்லை என்றால் அனுப்ப வேண்டாம். மேரி உண்மையில் தன் தந்தையின் சபதத்தை நிறைவேற்றினாரா? அப்பகுதியில் உள்ள மக்கள் சொல்வது எல்லாம் உண்மையா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் தீராத மர்மம் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக