ராணுவ தளபதியின் பதான்கோட் பயணம் ரத்து
செய்யப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் சீனா இடையே லடாக்
பகுதியில் நீண்ட நாட்களாக பதற்றம் நீடித்து வரும் நிலையில் லடாக்கின் கால்வன்
பள்ளத்தாக்கில், நேற்று இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே
ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும்
உயிரிழந்துள்ளனர்.இதனால் இந்தியா மற்றும் சீனா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனிடையே ராணுவ தளபதி நரவனே பதான்கோட்
பகுதியில் உள்ள ராணுவ நிலைகளை பார்வையிட இருந்த நிலையில் தற்போது அந்த பயணம்
ரத்து செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக