ஏசர் நிறுவனம் இன்று ஏசர் ஸ்விப்ட் 3
நோட்புக் எனப்படும் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இந்த சாதனம்
சில்வர் நிறத்தில் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த சாதனத்தைப் பற்றிய முழுத் தகவல்களையும் பார்ப்போம்.
ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக்
ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் மாடல் ஆனது
14-இன்ச் முழு எச்டி டச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு
1920x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 82.73 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம்
மற்றும் 15.95 மிமீ மெல்லிய சேஸ் ஆகியவற்றைக் அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது
இந்த சாதனம்.
ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் சாதனம் AMD Ryzen 5 4500u பிராசஸர்
வசதியுடன் ஆன்-போர்டு ரேடியான் கிராபிக்ஸ் மூலம் இயக்கப்படுகிறது. ஏசர் ஸ்விப்ட் 3
இந்தியாவின் முதல் ஏஎம்டி ரைசன் 4000 சீரிஸ் மொபைல் செயலி மூலம் இயங்கும்
மடிக்கணினி என்று கூறப்படுகிறது.
ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் சாதனம்
பொதுவாக சிலிம் பெசல்ஸ் மற்றும் 1.2 கிலோ எடை கொண்டுள்ளது, மேலும் 16ஜிபி ரேம்
மற்றும் 1டிபி எஸ்எஸ்டி ஆதரவைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் எனப்படும்
லேப்டாப் மாடல் 11 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது மற்றும் வேகமான சார்ஜிங்
திறன்களை வழங்குகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், 30நிமிடங்கள் சார்ஜ்
செய்தால், 4மணி நேரம் வீடியோ பிளே பேக் நன்மையை வழங்குகிறது.
இந்த புதிய லேப்டாப் மாடல் விண்டோஸ் 10 மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 2019, டி.டி.எஸ் ஆடியோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்பு இதில் உகந்த பாஸ், micro-speaker distortion தடுப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் மாடலில் விண்டோஸ் ஹலோ கைரேகை ரீடர் போன்ற அம்சங்களும் உள்ளன. மேலும் இது வேக் ஆன் வாய்ஸ் (WoV) அம்சத்தைக் கொண்டுள்ளது, இது திரை முடக்கப்பட்டிருந்தாலும் பயனர்களுக்கு விண்டோஸ் 10 க்கான குரல் செயல்பாட்டை அனுமதிக்கிறது.
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், பவர்-ஆஃப் சார்ஜிங் கொண்ட 1 எக்ஸ் யூ.எஸ்.பி 3.2 ஜென் 1 போர்ட், 1 எக்ஸ் யூ.எஸ்.பி 2.0 போர்ட், டூயல் பேண்ட வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனம் ரூ.59,999-ஆரம்ப விலையில் இ-ஸ்டோர்களில் கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக