எச்எம்டி குளோபல் தனது இரண்டாவது
ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் இந்த மாதத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. நோக்கியா 43
இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி என்ற பெயரில் வரும் ஜூன் 4 ஆம் தேதி நாட்டில்
அறிமுகம் செய்யப்படுவதாக நிறுவனம் தனது அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இதன்
விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
நோக்கியா நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி
நோக்கியா நிறுவனத்தின் இந்த புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி, பிரத்தியேகமாக பிளிப்கார்ட் ஈ-காமர்ஸ் தளத்தில்
விற்பனைக்குக் கிடைக்குமென்று நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில்
நோக்கியா ஸ்மார்ட் டிவியின் 43' இன்ச் சில முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது.
நோக்கியா ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியில் 4K எச்டிஆர் எல்இடி டிஸ்ப்ளே 3840 x 2160
பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் அறிமுகம் செய்யப்படுகிறது.
ஸ்மார்ட் டிவியின் ஆடியோ விபரங்கள்
இந்த நோக்கியா ஸ்மார்ட் டிவியில்
டால்பி விஷன் தொழில்நுட்பம் மற்றும் வைடு கலர் காமெட் தொழில்நுட்பத்துடன்
வருகிறது. நோக்கியா ஸ்மார்ட் டிவியில் அதி-மெலிதான பெசல்கள் இடம் பெற்றுள்ளது,
மேலும் இது 'சாலிட் குரோம் பெடெஸ்டல்ஸ்' உடன் வருகிறது. ஆடியோவைப் பொறுத்தவரை,
ஸ்மார்ட் டிவி 'டீப் பாஸ் டோன்கள், குறைந்தபட்ச ஹார்மோனிக் விலகல் மற்றும்
கிரிஸ்டல் கிளியர் வோக்கள் டியூன் அம்சத்துடன் வருகிறது.
JBL ஸ்பீக்கர்ஸ்
இந்த ஸ்மார்ட் டிவியின் ஸ்பீக்கர்கள்
JBL மூலம் இயக்கப்படும் மற்றும் ஸ்மார்ட் டிவியில் டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ்
ட்ரூ சரவுண்ட் சவுண்ட் அனுபவமும் வழங்கப்படுகிறது. இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்
டிவி ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தில் இயங்குகிறது, இத்துடன் உள்ளமைக்கப்பட்ட
Chromecast ஆதரவு போன்ற கூடுதலான அம்சங்களுடன் ஜூன் 4ம் தேதி வெளியிடப்படும் என்று
நிறுவனம் தெரிவித்துள்ளது.
முழுமையான பாதுகாப்பு வசதி
மேலும், பயனர்கள் நோக்கியா ஸ்மார்ட்
டிவியை வாங்குவதில் முழுமையான பாதுகாப்பையும் தேர்வு செய்யலாம் என்பதைப் பட்டியல்
வெளிப்படுத்துகிறது. இதன் பொருள் பயனர்கள் முழுமையான பாதுகாப்புத் திட்டத்தை
வாங்குவதற்கு இரண்டு வருடக் கூடுதல் முழு உத்தரவாதத்தையும், மூன்று ஆண்டு முடிவில்
30 சதவீத உத்தரவாத பரிமாற்ற மதிப்பையும் பெறுவார்கள் என்று நோக்கியா நிறுவனம்
தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட்டிவியின் விலை
இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்டிவியின்
விலை இந்தியச் சந்தையில் ரூ. 31,000 முதல் ரூ.34,000 திற்குள் இருக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக