Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 16 ஜூன், 2020

5-ம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளுக்கு அதிபதியாக விளங்குபவர் சுக்கிரன். இவருக்கு புதன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் நண்பர்கள். சூரியனும், சந்திரனும் பகை கிரகங்கள். சுக்கிரன் தன்னை வழிபடுபவர்களுக்கு சுகம், அழகு, நாவண்மை மற்றும் நன்மதிப்பு போன்ற நற்பலன்களை அருள்பவர்.

சுக்கிர பகவானின் அருள் கிடைக்கவும், இல்லற சுகத்தை பெறவும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து சுக்கிரனை வழிபட வேண்டும். கிரகங்களிலேயே அதிகபட்சமாக 20 ஆண்டுகளை தன்னை ஆளும் திசையாக பெற்றிருக்கும் கிரகமும் சுக்கிரனே.

சுக்கிரனை காதல் கிரகம் என்று அழைப்பார்கள். திருமண பந்தத்தில் சுக்கிரனின் பங்கு மிக முக்கியமானது. சாதாரணமாக இருந்தவர்கள்கூட திருமணத்திற்கு பிறகு சுக்கிரனின் அமைப்பால் மிகப்பெரிய செல்வ சீமான்களாக மாறியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு யோகத்தை தரக்கூடிய கிரகம்.

லக்னத்திற்கு 5-ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு பெண் குழந்தை யோகம் உண்டாகும்.

5ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

👉 வசதி வாய்ப்புகள் உண்டாகும்.

👉 பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும்.

👉 கல்வியில் மேன்மையான சூழல் ஏற்படும்.

👉 மகிழ்ச்சியான மணவாழ்வு உண்டாகும்.

👉 கற்பனை வளம் நிறைந்தவர்கள்.

👉 தோல்வியை தாங்கி கொள்ள முடியாதவர்கள்.

👉 மனைவியின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.

👉 நண்பர்களின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

👉 நினைத்த எண்ணங்கள் நிறைவேறும் வரை போராடக்கூடியவர்கள்.

👉 குடும்ப உறுப்பினர்களின் மீது அன்பு கொண்டவர்கள்.

👉 கலைத்துறை தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

👉 தாய்மொழியில் இலக்கியம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக