Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 4 ஜூன், 2020

8-ம் வீட்டில் குரு இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

நவகிரகங்களில் பிரதானமான குரு, சுபக்கிரகர் ஆவார். இவருக்கு எமகண்டன், கசன் என்ற இரண்டு புதல்வர்கள் உண்டு. மூன்று குணங்களில், சாத்வீக குணத்தைக் கொண்டவர். மஞ்சள் நிறம் உடையவர். அதனால் இவரை 'பொன்னன்" என்றும், 'வியாழன்" என்றும் கூறுவார்கள்.

எல்லா இன்பங்களையும் துறந்து, துறவரம் மேற்கொள்ளும் வைராக்கியமான மனதை கொடுப்பவர் குருதான். எதையும் தாங்கும் இதயம் என்று சொல்லக்கூடிய, மன உறுதியைத் தருபவர்.

பூர்வீகச் சொத்துக்களை அனுபவிக்கும் பாக்கியம் தருபவராகவும், விருதுகள் பெற வைப்பது, செய்த தர்மங்களால் துன்பங்கள் வராமல் காத்து நிற்கும் புண்ணியத்தைத் தருவது, குழந்தைகள் மேன்மை அடைந்து அவர்களின் மூலம் ஆதாயம் பெற வைப்பது, மனக்கவலையின்றி மகிழ்ச்சியான வாழ்க்கையை தருவதும் குருபகவான்தான்.

லக்னத்திற்கு 8-ல் குரு இருந்தால் அந்த ஜாதகக்காரர் நீண்ட ஆயுளை உடையவராக இருப்பார்கள்.

8ல் குரு இருந்தால் என்ன பலன்?

👉 அனைத்து திறமைகளையும் உடையவர்கள்.

👉 விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

👉 சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

👉 படுத்ததும் உறங்கக்கூடியவர்கள்.

👉 உலகியல் சுகங்களை ரசித்து அனுபவிக்கக்கூடியவர்கள்.

👉 நல்ல ஆரோக்கியம் கொண்டவர்கள்.

👉 திடீர் தனச்சேர்க்கை ஏற்படும்.

👉 ஏற்ற, இறக்கமான கல்வி நிலை உடையவர்கள்.

👉 ஏமாற்றமான சூழல் அடிக்கடி உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக