சுக்கிரன் அசுரர்களுக்கு குரு. இவர் சுக்கிராச்சாரியார் எனவும் அழைக்கப்படுகிறார். ரிஷபம், துலாம் ராசிக்கு அதிபதியான இவர் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்திற்கு உரியவர்.
மகாபலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்கிராச்சாரியார் என்று அழைக்கப்படும் சுக்கிரன். எந்த கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரைக் காப்பாற்ற வேண்டுமென்ற குணம் கொண்டவர்.
சுக்கிரனின் அருள் இருந்தாலே போதும் ஆபரணம் சேரும். சுக்கிரனுக்கு உரிய திசை கிழக்குத் திசை. இந்திராணி இவருக்கு அதி தேவதை. இந்திர மருத்துவன் பிரத்யதி தேவதை. சுக்கிரனுக்கு உகந்த ரத்தினம் வைரம்.
லக்னத்திற்கு 9-ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு சமுதாயத்தில் நற்பெயர் உண்டாகும்.
9-ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?
👉 ஆடம்பரமான வாழ்க்கை அமையும்.
👉 பிறருக்கு உதவும் குணம் உடையவர்கள்.
👉 பிறரின் ஆலோசனைகளை கேட்டு நடக்கக்கூடியவர்கள்.
👉 பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.
👉 தொழில் திறமை உடையவர்கள்.
👉 மனைவியின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும்.
👉 சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையும்.
👉 தந்தையின் ஆதரவு கிடைக்கும்.
👉 செல்வாக்கு மற்றும் வசதி, வாய்ப்பு உடையவர்கள்.
👉 பொதுக்காரியங்களில் ஆர்வம் உடையவர்கள்.
👉 அனைவராலும் விரும்பப்படுவார்கள்.
👉 வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக