Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 24 ஜூன், 2020

தினமும் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை இப்படி சாப்பிட்டா வேகமா எடை குறையுமாம்...

பொதுவாக வாழைப்பழம் நமக்கு ஏராளமான நன்மைகளை வழங்க கூடியது. இதுவரை வாழைப்பழம் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகளை மட்டுமே போக்கும் என்று நாம் நினைத்து கொண்டிருந்தோம். ஆனால் உண்மையில் வாழைப்பழத்தை கொண்டு உங்க  உடல் எடையை குறைக்க முடியும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாக மக்கள் மத்தியில் வாழைப்பழம் எடையை அதிகரிக்க கூடியது என்ற தவறான எண்ணம் நிலவி வருகிறது. ஆனால், நீங்கள் உங்க உடல் எடையை குறைக்க விரும்பினால் அதற்கு இந்த வாழைப்பழம் போதுமானது.

வாழைப்பழங்கள் ஏன் சிறந்தது தெரியுமா? 

நாம் எப்பொழுதும் நம் உடம்பிற்கு தேவையான ஆற்றலை பெறுவதே இல்லை. இரவு தூங்கிய பிறகு சிலருக்கு வயிறு பசிக்கும். ஏன் ஒரு நாளின் அடிக்கடி கூட சிலருக்கு பசிப்பது உண்டு. இந்த மாதிரியான சமயங்களில் நாம் என்ன செய்வோம் நிறைய நெறுக்கு தீனிகளை வாங்கி உண்ண ஆரம்பித்து விடுவோம். இதன் விளைவு தேவையில்லாத உடல் எடை அதிகரிப்பு. எனவே, உங்க பசியை போக்க ஒரு வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்க வயிற்று பசியை மட்டுப்படுத்துவதோடு உடம்பிற்கு தேவையான ஆற்றலையும் கொடுக்கிறது. இதனால் தேவையில்லாமல் உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படும்.

வாழைப்பழத்தின் ஊட்டச்சத்து அளவுகள் என்ன... 

ஒரு சிறிய 101 கிராம் வாழைப்பழத்தில் 89. 9 கிலோ கலோரி ஆற்றலை கொண்டுள்ளது. மேலும் இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. விட்டமின் A, E, K, B1, B2, B3 மற்றும் B6 போன்ற சத்துக்கள் உள்ளன. அதிகளவு பொட்டாசியம் காணப்படுகிறது.

வாழைப்பழம் எப்படி உடல் எடையை குறைக்கிறது... 

பொதுவாக நாம் உடற்பயிற்சி செய்த பிறகு ரொம்ப பசிக்கும். இந்த மாதிரியான சமயங்களில் நீங்கள் என்ன உணவு எடுத்தாலும் எனர்ஜி பத்தாது. எனவே உங்க உணவில் வாழைப்பழத்தை சேர்த்து கொள்ளுங்கள். வாழைப்பழம் உங்களுக்கு கீழ்க்கண்ட நன்மைகளை வழங்குகிறது.

வாழைப்பழம் ஆற்றலால் நிரம்பியது.... 

உடற்பயிற்சிக்கு பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது ஒரு நாளைக்கு தேவையான ஆற்றலின் பாதியளவு பூர்த்தி ஆகிறது. வாழைப்பழம் ஆற்றல்கள் நிறைந்த சக்தி வாய்ந்த பழம் என்று ஆய்வு கூறுகிறது.

குடலை சுத்தம் செய்கிறது... 

பழுத்த வாழைப்பழங்களில் பெக்டின் எனப்படும் உணவு நார்ச்சத்து உள்ளது. இது குடலில் இருந்து மலத்தை நோக்கி நீரை ஈர்க்கிறது, இதனால் மலச்சிக்கலைத் தணிக்கவும் நிவாரணம் பெறவும் இது உங்களுக்கு உதவுகிறது. எனவே வாழைப்பழம் குடலை சுத்தம் செய்து மலச்சிக்கலை போக்குகிறது. 

உடல் எடையை குறைக்க உதவுகிறது... 

வாழைப்பழங்கள் நொறுக்கு தீனிகள் ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வதை நிறுத்தி உள்ளதால் உடல் எடை தானாகவே குறைய ஆரம்பித்து விடுகிறது. மேலும் இந்த பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

காயங்களை ஆற்றுகிறது... 

உடற்பயிற்சி செய்யும் போது அடிக்கடி தசைப்பிடிப்பு, காயங்கள், உடம்பு வலி போன்றவை ஏற்படும். இப்பொழுது வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு அந்த பிரச்சினைகள் தற்போது குறைந்துள்ளது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியான ஒரு ஆய்வின் படி, வாழைப்பழங்கள் உடம்பிற்கு தேவையான கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன. இதனால் எலும்பு, தசைகள் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் அமைகிறது.

அடிக்கடி நோய்வாய்ப்படுவதில்லை.... 

வாழைப்பழம் நம் நோயெதிரிப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. உதாரணமாக வாழைப்பழம் சாப்பிடுவதற்கு முன் என் நோயெதிரிப்பு சக்தி 10-க்கு 4 ஆக இருந்தது ஆனால் வாழைப்பழம் சாப்பிட ஆரம்பித்த பிறகு என் நோயெதிரிப்பு சக்தி 7 ஆக அதிகரித்து உள்ளது என வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் நான் அடிக்கடி நோய்வாய்ப்படுவது தடுக்கப்பட்டு உள்ளது. மேலும் நான் வலிமையாக உணர்கிறேன். எனவே இப்படி ஏராளமான நன்மைகள் தரும் வாழைப்பழத்தை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக