நம்பமுடியாத விலையில் ரெட்மி 9ஏ
அனைவரும் விரும்பக்கூடிய முக்கிய விபரமாக இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை அமைத்துள்ளது. நம்பமுடியாத விலையில் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன், மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட் உடன் குவாட் ரியர் கேமரா அமைப்புடன் விற்பனைக்குக் கிடைக்குமென்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.
6.53' இன்ச் கொண்ட வாட்டர் டிராப்-நாட்ச் டிஸ்ப்ளே
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் மாடலை போலவே, ரெட்மி 9ஏ மாடலும் 6.53' இன்ச் கொண்ட டிஸ்ப்ளேயுடன் 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமராவுடன் கூடிய வாட்டர் டிராப்-நாட்ச் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸருடன் வெளிவரும் என்று நிறுவனத்தின் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிரட்டலான குவாட் ரியர் கேமரா அமைப்பு
மிரட்டலான கேமரா அம்சத்திற்காக இந்த புதிய ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஒரு 13 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமராவும், கூடுதலாக மூன்று உயர்திறன் கொண்ட கேமராவும் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, புதிய ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.
10W ஃபாஸ்ட் சார்ஜிங்
அதேபோல் நமக்கு முன்னாள் கிடைத்த லீக் தகவலின் அடிப்படையில் பார்த்தால் சியோமியின் புதிய ரெட்மி 9ஏ ஸ்மார்ட்பஹோனே 4 ஜி ஆதரவுடன், 10W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வெளிவரும் என்று தெரிகிறது. குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் இந்த வேரியண்ட் 3 ஜிபி ரேம் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் உடனடியாக இந்திய சந்தைக்கும் வருமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
விலை என்ன?இருப்பினும் நிச்சயம் பட்ஜெட் விலை போன்களை சியோமி இந்தியாவில் அறிமுகம் செய்யாமல் இருக்காது என்று நம்புவோம். இந்த மாத தொடக்கத்தில் சியோமி நிறுவனம் அதன் ரெட்மி 9 ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போனின் 3 ஜிபி + 32 ஜிபி மாடலானது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.12,800 க்கு அறிமுகமானது. அதைவைத்துப் பார்க்கையில் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெறும் ரூ.8,499 கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக