>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 12 ஜூன், 2020

    கல்லூரி மாணவியுடன் குடித்தனம் நடத்திய கணவன்.. தகவலறிந்த காவல்துறையினரின் அதிரடி!

    கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குழிவிளை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் பளுகல் பகுதியை சேர்ந்த சுகந்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

    இவர்களுக்கு 19 வயதில் ஒரு மகளும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் மினிபேருந்து ஓட்டுநரான மணிகண்டன், பேருந்தில் பயணம் செய்யும் கல்லூரி மாணவிகளை பேச்சால் மயக்கி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மடிச்சல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியின் ஏழ்மையை பயன்படுத்தி திருமணம் செய்யாமல் குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

    இதனால் தனது முதல் மனைவி மற்றும் மகள்களை தவிக்க விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணிகண்டனின் மனைவி பளுகல் களியக்காவிளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இதனால், கணவன் குடித்தனம் நடத்தி வரும் கல்லூரி மாணவி வீட்டுக்கு வந்த சுகந்தி, தனது கணவனை தன்னிடம் ஒப்படைக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

    இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால், உன் வயதில் எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், அவரை என்னுடன் அனுப்புமாறு சுகந்தி கேட்க, பதிலுக்கு கல்லூரி மாணவியும் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.

    இருவரும் மாறி மாறி கூச்சலிட்டதால் வேடிக்கைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள மணிகண்டனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக