தேனியின் கன்னிசேர்வைபட்டியை சேர்ந்தவர் பிரபு, சொந்தமாக சரக்கு லாரி வைத்துள்ளார்.
இவர் மனைவி பவித்ரா, இவர்களுக்கு தர்னீஸ் 7 வயதில் ஒரு மகனும், லக்சன் ஒரு வயதில் மகனும் இருக்கின்றனர்.
தினமும் குடித்துவிட்டு வரும் பிரபு அடிக்கடி பவித்ராவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார், இதனால் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் பவித்ரா அவரது தாய் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பிரபு லோடு ஏற்றிக்கொண்டு பாண்டிச்சேரி சென்ற நிலையில் வீட்டில் பவித்ரா மற்றும் அவரது மாமனார் கோபாலகிருஷ்ணன்,மாமியார் ராசாத்தி மற்றும் இரண்டு குழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர்.
பவித்ரா வீட்டிற்குள் இருந்த அறையில் படுத்திருந்த நிலையில் இரண்டு குழந்தைகளும் அவர்களது தாத்தா, பாட்டியுடன் ஹாலில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இரவு பதினோரு மணியளவில் பாட்டியுடன் படுத்திருந்த 2 குழந்தைகளையும் எழுப்பிய பவித்ரா தன்னுடன் வந்து தனது அறைக்குள் தூங்குமாறு அழைத்துச் சென்றார்.
பின்னர் அவர் குளிர்பானத்தில் திராட்சை பழங்களுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை கலந்து வைத்து தர்னீஷ் மற்றும் லக்சன் ஆகிய இருவருக்கும் கொடுத்துள்ளார்.
அதன்பின் தானும் குளிர்பானத்தில் பூச்சி மருந்தை கலந்து குடித்துள்ளார்.தொடர்ந்து அதே ஊரில் குடியிருக்கும் தனது தாய்மாமா செந்தில் என்பவருக்கு போன் செய்து தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்ததாக தெரிவித்தார்.
இதனையடுத்து பவித்ராவின் வீட்டிற்கு சென்ற செந்தில் கதவைத் தட்டி எழுப்பி விஷயத்தைக் கூறிய பிறகுதான் பவித்ராவின் மாமனார் கோபாலகிருஷ்ணனுக்கும் மாமியார் ராசாத்திக்கும் விஷயம் தெரிந்தது.
அறை கதவை தட்டியதும் பவித்ரா திறந்தார், உள்ளே குழந்தைகள் சடலமாக கிடந்தனர், பவித்ரா விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த நிலையில் தான் குடித்த விஷத்தை வாந்தி எடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து பவித்ரா மருத்துவமனையில் சேர்த்தனர், குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றிய போலிசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்போது பவித்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. தந்தை மீது வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல், கொலைக்கு தூண்டுதலாக இருந்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபு கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், பவித்ரா தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
அவர் கண்முழித்து நடந்ததை கூறினால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என போலிசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக