Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 12 ஜூன், 2020

விளக்கேற்றும் போது மறந்துபோய் கூட இதெல்லாம் பண்ணிடாதீங்க





இது இந்துக்களின் அடையாளமாக கருதப்படுகின்றது. விளக்கு ஏற்ற பல விதிகள் இருந்தாலும் விளக்கு ஏற்றும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகளும் உண்டு.
அந்தவகையில் விளக்கேற்றும்போது செய்யக்கூடாத சில முக்கிய செயல்கள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.
  • காலை 3 மணி முதல் 5 மணிக்குள் விளக்கேற்ற சர்வமங்கள யோகத்தை தரும். மாலை 6 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபட வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை கிட்டும்.
  • காலை விளக்கேற்றும்போது உடல், மனம் சுத்தத்துடன், வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.
  • மாலையில் விளக்கேற்றும்போது, வாசலில் தண்ணீர் தெளித்துக்கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.
  • காலை, மாலை விளக்கேற்றும்போது கொல்லைப்புறக் கதவைச் சாத்திடவேண்டும். கொலைப்புறக்கதவு இல்லாதவர்கள் பின் பக்கம் உள்ள ஜன்னல் கதவைச் சாத்தியே விளக்கேற்ற வேண்டும்.
  • விளக்கேற்றிய பிறகு தலை சீவக்கூடாது. வீட்டைப் பெருக்கிக் கூட்டக்கூடாது. சுமங்கலிப் பெண் விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக் கூடாது.
  • விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது. விளக்கேற்றியவுடன் தலை குளிக்கக் கூடாது. விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது. விளக்கேற்றியவுடன் சாப்பிடக்கூடாது.
  • விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவற்றைக் கொடுக்கக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக