சிறு,
குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பொருட்களை ஏற்றுமதி செய்வதை மேலும்
ஊக்குவிப்பதற்காக எம்எஸ்எம்இ எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில் என்ற அமைப்பு
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது
மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக இந்த
எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே
அதிகளவு வேலை வாய்ப்புகளை வாரி வழங்கும் துறையாக சிறு, குறு மற்றும் நடுத்தர
தொழில் நிறுவனங்கள் துறை விளங்குகின்றது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள்
சார்பாக தற்போது 147.4 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி வணிகம் நடைபெற்று
வருகிறது. இந்த நிலையில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் இத்துறை தொழில் நிறுவனங்கள்
சார்பாக 2017 - 2018 ஆண்டில் செய்யப்பட்ட ஏற்றுமதி 48.56 சதவீதமாகும்.
அதனால்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை உலக பொருளாதாரத்திற்கு தங்களுடைய
பங்களிப்பை அளிக்கச் செய்ய அவர்களுடைய பொருட்களை ஏற்றுமதி செய்யவும், ஏற்கனவே
செய்து வரும் ஏற்றுமதியை மேலும் ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு எம்எஸ்எம்இ
எக்ஸ்போர்ட் ப்ரமோஷன் கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்
மூலம் 2020-ஆம் ஆண்டில் இந்த தொழில் நிறுவனங்கள் மூலம் 100 பில்லியன் டாலர்
அளவுக்கு ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்வது என மத்திய அரசு கடந்த ஆண்டே
திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனாவின் காரணமாக அது இயலுமா என்று தெரியவில்லை.
எனினும்
இந்த கவுன்சில் ஏற்றுமதிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை
தயார்படுத்துவது. ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்வதற்காக இத்தொழில் நிறுவனங்கள்
அமைந்துள்ள பகுதிகளை மேம்படுத்தி ஏற்றுமதிக்கு தேவையான உதவிகளை செய்வது உள்ளிட்டவை
முக்கிய நோக்கமாக கொண்டு எம்எஸ்எம்இ எக்ஸ்போர்ட் ப்ரமோஷன் செல்
அமைக்கப்பட்டுள்ளது.
அதோடு
ஏற்றுமதி செய்ய நினைக்கும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஆலோசனைகள், உதவிகள்,
மானியங்களை வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது நிச்சயம்
எம்எஸ்எம்இ ஆக பதிவு செய்பவர்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமே. இதன் மூலம்
சில சலுகைகளை பெற முடிவதோடு, உங்களது ஏற்றுமதிக்கும் இது உறுதுணையாக அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக