உலகம்
முழுவதும் இந்த ட்விட்டர் தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக
இந்த தளத்தின் மூலம் மக்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். பின்பு
இந்த தளத்தில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகிறது.
தற்சமயம்
லைக்,ரீட்வீட், ரிப்ளை இல்லாமல் 24மணி நேரத்தில் தானகவே அழிந்துவிடும்படி
‘ஃப்ளீட்' வசதியை ட்விட்டர் நிறுவனம்
பயனர்களுக்கு
வழங்கியுள்ளது. இதேபோன்று அம்சம் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற
தளங்களிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது
வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்; போன்ற தளங்களில் ஸ்டோரி என்ற பெயரில்
வழங்கப்படும் சேவைதான் ட்விட்டரில்ஃப்ளீட் என அழைக்கப்படுகிறது. இதில் பயனர்கள்
ட்வீட் செயும் தகவல்கள் சரியாக 24மணி நேரத்தில் தானாக மறைந்துவிடும். இதனை லைக்கோ,
ரீட்விட்டோ செய்ய முடியாது என்றும், தனிப்பட்ட முறையில் கமெண்ட் மட்டும்தான் செய்ய
முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த
புதிய வசதி கடந்த மாதம் பிரேசில் நாட்டில் முதல்முறையாக அமலுக்கு வந்தது, தற்போது
இந்தியாவில் உள்ள அனைவரும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என
அறிவித்துள்ளனர். பயனர்களின் நீண்டநாள் கோரக்கையை ஏற்று இந்த அப்டேட்டை
கொடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக
மற்ற ட்வீட்கள் போல் இல்லாமல், ஸ்டோரியில் போடும் டிவீட்களை ஷேர் செய்வது கடினம்
என்றும், பயனர்கள் மற்றவர்கள் ட்விட்டர் கணக்கை பின் தொடரவில்லை என்றாலும்,
அவர்களது ஃப்ளீட்களை பார்க்க முடியும், வாட்ஸ்அப்-ல் வருவதுபோல் நாம் போடும்
ஸ்டோரியை யார் யார் பார்க்கிறார்கள் என்பதையும் ட்விட்டர் அப்டேட்டில் தெரிந்து
கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டிப்பாக
ட்விட்டர் செயலியை பயன்படுத்துவர்களுக்கு மட்டுமே இந்த புதிய அப்டேட்
கொடுக்கப்பட்டுள்ளது, இணையதளங்களில் ட்விட்டர் பயன்படுத்துபவர்களால் இந்த வசதியை
பயன்படுத்த முடியாது என விளக்கம் கொடுத்துள்ளனர்.
மேலும்
புகைப்படங்கள், செய்திகள், GIF உள்ளிட்டவைகளை ட்விட்டர் ஃப்ளீட்டில் பகிர முடியும்
என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்பு இந்த வசதியை பெற ட்விட்டர் கணக்கு
வைத்துள்ள பயனர்கள் செயலியை அப்டேட் செய்தால் போதும் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக