கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தனது பயணிகளை பாதுகாக்க இந்தியன் ரயில்வே புற ஊதா சுத்திகரிப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது
உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து பயணிகளைப் பாதுகாக்க இந்திய ரயில்வே பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்தியன் ரயில்வே இப்போது புற ஊதா சுத்திகரிப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம், தானியங்கி டிக்கெட் சரிபார்ப்பு இயந்திரம், தானியங்கி முகமூடி மற்றும் கை சுத்திகரிப்பு விநியோக இயந்திரம் ஆகியவற்றிற்குப் பிறகு தற்போது புற ஊதா சுத்திகரிப்பு இயந்திரம் ரயில்வே துறையில் இடம்பிடித்துள்ளது.
இந்த புற ஊதா சுத்திகரிப்பு இயந்திரம் மூலம், நம் கையில் இருக்கும் எந்தவொரு ஆவணத்தையும் நாம் சுத்தப்படுத்த முடியும்.
இதுதொடர்பான அறிவிப்பினை இந்திய ரயில்வே தனது ட்விட்டர் பதிவின் மூலம் தெரியப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுநோயைத் தடுக்கும் திசையில் மேற்கு ரயில்வேயின் கோச்சிங் டிப்போ சபர்மதியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், எந்த வகையான ஆவணம் / கோப்பு போன்றவற்றை இந்த புற ஊதா சுத்திகரிப்பு இயந்திரத்தால் சுத்தப்படுத்த முடியும் எனவும் இந்தியன் ரயில்வே குறிப்பிட்டுள்ளது.
கொரானா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்க சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயணிகளையும் ரயில்வே வீரர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க ரயில்வே தொடர்ந்து முயன்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வட மத்திய ரயில்வே பிரயாகராஜ் ரயில் நிலையத்தில் விமான நிலையம் போன்ற போர்டிங் பாஸ் வசதியை அறிமுகப்படுத்தியது. கூடுதலாக, தானியங்கி QR Code அடிப்படையிலான டிக்கெட் ஸ்கேனிங் முறை செயல்படுத்த துவங்கியது. இந்நிலையில் தற்போது புற ஊதா சுத்திகரிப்பான் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக