இயந்திர கற்றலைப் பயன்படுத்தி பயன்பாடுகளை உருவாக்க உலகெங்கிலும் உள்ள டெவலப்பர்களை ஊக்குவிக்கும் கூகிள் ஆண்ட்ராய்டு டெவலப்பர் சேலஞ்சின் 10 வெற்றியாளர்களில் மூன்று பேர் இந்தியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. AgroDoc, Leepi, UnoDogs என்ற மூன்று செயலிகளை உருவாக்கிய போட்டியாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
கொச்சியைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன், Agrodoc என்ற செயலியை உருவாக்கியுள்ளார். இது பயிர்களுக்கு ஏற்படும் நோயைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறைகளைப் பற்றி விவசாயிகளுக்கு வழிகாட்டும். விவசாயத் துறையில் இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பெங்களூருவைச் சேர்ந்த பிரின்ஸ் படேல் என்பவர் Leepi என்ற செயலியை கண்டுபிடித்துள்ளார். அமெரிக்க சைகை மொழிக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கை சைகைகளையும் சின்னங்களையும் (hand gestures and symbols) கற்றுக்கொள்ள மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
டெல்லியைச் சேர்ந்த சின்மனி மிஷ்ரா என்பவர் UNODOGS என்ற செயலியை உருவாக்கியிருக்கிறார். இது செல்லப் பிராணிகளுக்கு உருவாக்கப்பட்ட சிறப்பு செயலி. தனிப்பயனாக்கப்பட்ட தகவல்கள் மற்றும் உடற்பயிற்சி திட்டங்களை கொடுத்து, உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணியின் ஆரோக்கியத்தை சிறப்பாக கவனித்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்
இயந்திர கற்றல் தொழில்நுட்பமானது, நாம் அனைவரும் நாள்தோறும் பயன்படுத்தும் செயலிகளை உருவாக்கும் டெவலப்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்று ஆண்ட்ராய்ட் டெவலப்பர் துறையின் இயக்குநர் ஜேக்கப் லெஹ்பாம் (Jacob Lehrbaum) தெரிவித்தார்.
இயந்திர கற்றலைப் பயன்படுத்தி செயலிகளை உருவாக்குவதை ஊக்குவிப்பதற்காக கூகிள் கடந்த ஆண்டு Android Developer Challenge திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
"பல மாத கடின உழைப்புக்குப் பிறகு, இன்று ஆண்ட்ராய்டு டெவலப்பர் சேலஞ்சின் 10 வெற்றியாளர்கள் தங்கள் செயலிகளை மக்களின் உபயோகத்திற்காக பரிசளித்திருக்கிறார்கள்" என்று லெஹ்பாம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பலூசிஸ்தானில்(Balochistan) Agrifarm செயலி பயன்படுத்தப்பட்டு நல்ல பலனளிப்பது கண்டறியப்பட்டது. அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த தக்காளி, சோளம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற விளைபொருட்களில் பெரும் சேதத்தைத் தடுக்க இந்த செயலி உதவியது.
ML, 5G, foldables என அண்ட்ராய்டு தொடர்ந்து எல்லைகளை தாண்டி தனது வரம்பை விரிவுப்படுத்தி வருகிறது. புதிய எல்லைகளை வரையறுத்து, நுகர்வோளுக்கு சிறந்த அனுபவங்களை கொடுப்பதற்காக உங்கள் உதவி எங்களுக்குத் தேவை" என்று கூகிள் தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக