Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 5 ஜூன், 2020

பாம்பின் மீது சவாரி செய்யும் தவளை; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ஒரு பாம்பின் மீது அதன் இரையே அமர்ந்து சவாரி செய்வதை நீங்கள் எப்போதாவது பார்த்ததுண்டா?
இந்த கேள்வியை உங்களிடன் கேட்டால், உங்கள் மனதில் தோன்றும் பதில் ‘அட நடக்குற விசயத்த கேலுங்கப்பா...’ என்பது தான். ஆனால் உண்மையில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
இந்த காட்சிகளுடன் கூடிய வீடியோ ஓன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்குவது மட்டும் அல்லாமல், இந்த வீடியோவை தங்களது சமூக ஊடக கணக்குகளில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுசாந்தா நந்தா இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கு தலைப்பாக., "இயற்கையின் நாடகம்.. வேட்டையாடுபவர் மீது சவாரி செய்யும் இரை. கடவுளின் படைப்புகளைப் பற்றிய யோசிக்கையில் நாம் பிரமித்திருக்கிறோம்." என குறிப்பிட்டுள்ளார்.
எட்டு விநாடி வீடியோ, ஒரு தவளை ஒரு பாம்பின் மீது அமைதியாக உட்கார்ந்திருப்பதைக் காட்டுகிறது, பாம்பு அதை சாப்பிட முயற்சிக்காமல் சுற்றி வருகிறது. இந்த அரிய வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்ட உடனேயே உடனடி வெற்றி பெற்றது.
இந்த வீடியோ இதுவரை சுமார் 4.8k பார்வைகள் மற்றும் சில விருப்பங்கள் மற்றும் மறு ட்வீட்ஸைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்க்கையில் உங்கள் மனதில் தோன்றுவது என்ன?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக