பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம், மின்சார வாகனம் சார்ந்த உற்பத்தியில் ஈடுட்டு வருகின்றது. இது, ஏத்தர் 450 ப்ளஸ் மற்றும் ஏத்தர் 450 எக்ஸ் ஆகிய இரு வேரியண்ட் மின்சார ஸ்கூட்டர்களை இந்தியச் சந்தையில் விற்பனைச் செய்து வருகின்றது. ஆனால், இதன் தயாரிப்புகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் கிடைப்பதில்லை.
தற்போது, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்த மின்சார வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில்தான் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இத்துடன், விற்பனையையும் ஊக்குவிக்கும் முயற்சியில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இதன்படி, விரைவில் எக்ஸ்சேஞ் திட்டத்தை அது அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தற்போது பயன்பாட்டில் இருக்கும் குறிப்பிட்ட நிறுவனங்களின் எரிபொருள் வாகனங்களை எக்ஸ்சேஞ்ச் செய்து ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்க அது திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த தகவல் அடுத்த வரும் மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்படி, ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜுபிடர் உள்ளிட்ட ஸ்கூட்டர்கள் எக்ஸ்சேஞ்ஜ் செய்யப்பட்ட உள்ளன.
பெட்ரோல் ஸ்கூட்டர்களுடன் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சற்றே விலையுயர்ந்தவையாக காட்சியளிக்கின்றன. எனவே, இதன் விற்பனை லேசான பின்னடைவைக் கொண்டதாக இருக்கின்றது. எனவேதான், இந்த நிலையை மாற்றியமைக்கும் விதமாக எக்ஸ்சேஞ்ஜ் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் ஏத்தர் 450 பிளிஸ் ரூ. 1.49 லட்சத்திற்கும், 450 எக்ஸ் ரூ. 1.59 லட்சத்திற்கும் விற்கப்பட்டு வருகின்றது.
இந்த அதிக விலையைக் கொடுத்து மின்சார ஸ்கூட்டர்களை வாங்க மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனை உணர்ந்ததன் காரணமாக எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தில் ஏத்தர் களமிறங்க இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரின் போட்டியாளனாக இருக்கும் பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் உள்ளிட்டவற்றிற்கு சற்றே டஃப் கொடுக்க இந்த யுக்தி உதவும் என அது எதிர்பார்க்கின்றது.
ஏனென்றால், எக்ஸ்சேஞ்ஜின் அடிப்படையில் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை ஏத்தர் மின்சார ஸ்கூட்டர்களின் விலை குறைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. எனவே, இது வாடிக்கையாளர்களை கவரும் என ஏத்தர் எனர்ஜி நம்புகின்றது. இந்த திட்டத்தின்மூலம் ஹோண்டா மற்றும் நிறுவனங்களின் ஸ்கூட்டர்கள் மட்டுமல்லாமல் சுசுகி அக்செஸ் 125, ஹோண்டா டியோ மற்றும் டிவிஎஸ் என்டார்க் உள்ளிட்ட பல ஸ்கூட்டர்கள் எக்ஸ்சேஞ்ஜ் செய்யப்பட உள்ளன.
இந்த எக்ஸ்சேஞ்ஜ் பிளானுடன் பேட்டரி சந்தா திட்டத்தையும் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஏத்தர் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பேட்டரி பற்றிய எந்தவொரு கவலையையும் அதன் வாடிக்கையாளர்கள் துளியளவும் பெற மாட்டார்கள் என கூறப்படுகின்றது. ஏனெனில், சந்தேகம் முதல் கோளாறு வரை அனைத்தையும் இந்த இந்த திட்டத்தின் ஏத்தர் தீர்க்க இருக்கின்றது.
குறிப்பிட்டு கூற வேண்டுமானால், ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் பேட்டரி 80 சதவீதத்திற்கும் கீழ் திறன் குறைபாட்டைச் சந்திக்குமானால், அதனை உடனடியாக ரீபிளேஸ் செய்து ஏத்தர் வழங்கும். இதனை வரம்பற்ற முறையில் செய்துகொள்ளலாம் என கூறப்படுகின்றது. இத்துடன், கன்னெக்டட் சேவை மற்றும் ஒரு சில அப்கிரேஷனையும் அது வழங்க இருக்கின்றது.
இதேபோன்று, ஏத்தர் நிறுவனம் அதன் விற்பனையை விரிவாக்கம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றது. அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதன் புதிய ஷோரூம்களை சென்னையின் நுங்கம்பாக்கம் போன்ற முக்கியப் பகுதிகளில் தொடங்கியது. இந்த அறிமுகத்தின் தொடர்ச்சியாக நுகர்வோர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு இலவசமாக அதன் ஸ்கூட்டர்களை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இலவசமாக சார்ஜ் செய்துகொள்ளலாம் என அறிவித்தது.
இதைத்தொடர்ந்து விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கின்ற வகையில் புதிய முயற்சிகளைக் கையாளத் தொடங்கியுள்ளது.
ஏத்தர் நிறுவனம் விற்பனைச் செய்து வரும் 450 ப்ளஸ் மின்சார ஸ்கூட்டரில் 7.2 எச்பி மற்றும் 22 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் மின்மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, 450 எக்ஸ் மாடலில் 8 எச்பி மற்றும் 26 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்ட மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
இவற்றிற்கு இடையே 10 முதல் 15 கிமீ வரையிலான ரேஞ்ஜ் வித்தியாசம் உள்ளது. இதுதவிர வேறெந்த வித்தியாசமும் பெரியளவில் இல்லை. இவை அதிகபட்சமாக 70 முதல் 85 கிமீ வரையிலான ரேஞ்ஜையே வழங்கி வருகின்றன.
அதேசமயம், ஏத்தர் நிறுவனம் மின்சார ஸ்கூட்டர் விற்பனையை அதிகரிக்கச் செய்வதற்காக ஸ்பெஷல் இஎம்ஐ திட்டத்தையும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக