மாமியார் வீட்டில் தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று இளைஞர் ஒருவர், ஆத்திரத்தில் மனைவி மற்றும் அவரது தம்பியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜமாய். இவர் மனைவி காஜல். ஜமாயின் மாமியார் பாப்லியின் வீடு அவர் வசிக்கும் பகுதியின் அருகிலேயே இருந்தது. இந்த நிலையில் மாமியார் மற்றும் அவரது வீட்டு நபர்கள் தனக்கு சரியான மரியாதையை கொடுக்கவில்லை என்ற கோபத்தில் அடிக்கடி புலம்பிக் கொண்டிருந்துள்ளார்.
இது தொடர்பாக மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் இரவில் இது தொடர்பாக ஏற்பட்ட கோபத்தில் காஜல் மற்றும் அவர் சகோதரர் சாஹிலை கோடாரியால் ஜமாய் வெட்டி கொன்றுவிட்டு, பின்பு காவல்நிலையத்திற்கு சென்று விஷம் குடித்துவிட்டு மயக்கமடைந்துள்ளார்.
இதைய பார்த்து அதிர்ச்சியடைந்த போலிசார் ஜமாயை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இது குறித்து ஜமாயின் மாமியார் பாப்லி பொலிசாரிடம் கூறுகையில், சம்பவத்தன்று ஜமாய், காஜல் மற்றும் சாஹலை கொன்றுவிட்டு என் வீட்டு கதவையும் உடைக்க முயன்றான், ஆனால் அது முடியாததால் அங்கிருந்து சென்றுவிட்டான் என கூறியுள்ளார்.
தற்போது ஜமாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பொலிசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக