வெடி மறைத்து வைத்துக் கொடுத்த மட்டனைச் சாப்பிட்ட நரி ஒன்று பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் வாழை, கரும்பு சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்த பகுதிகள் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள இடம் என்பதால், மான், நரி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன உயிரினங்கள் வந்த பயிர்களை நாசம் செய்து வந்ததாக கூறப்படுகின்றது.
இதற்காக வனத்துறையினருக்கு ஒருசிலர் தொடர்ந்து புகார்களும் அளித்ததையடுத்து, வனத்துறையினருடன் பொலிசாரும் இணைந்து தீவிரமான கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று காலையில் பணியில் இருந்த போது, 12 பேர் கொண்ட கும்பலிடம் இருந்த சாக்கு பையை வாங்கி பார்த்தபோது, அதில் வாய் கிழிந்த நிலையில் ஒரு நரி இறந்து கிடந்தது மட்டுமின்றி வாயெல்லாம் ரத்தம் வழிந்தபடி இருந்ததால், 12 பேரையும் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இவர்கள் எல்லாருமே திருவெறும்பூர் அருகேயுள்ள பூலாங்குடி காலனியை சேர்ந்த ராம்ராஜ், சரவணன், ஏசுதாஸ், சரத்குமார், தேவதாஸ், பாண்டியன், விஜயகுமார், சத்தியமூர்த்தி, சரத்குமார், ராஜமாணிக்கம், ராஜூ , பட்டம்பிள்ளை ஆகியோர் என்பது தெரியவந்தது. வனத்துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
வேட்டையாடுவதை வழக்கமாக வைத்திருக்கும் இந்த கும்பல், துப்பாக்கி சுடுவது, ஈட்டியால் குத்துவது, வலை விரித்து பிடிப்பது, வெடி வைத்து பிடிப்பது என செயல்பட்டு வந்துள்ளனர்.
இறைச்சிக்குள் நாட்டு வெடியை மறைத்து வைத்து விடும் இவர்கள், அதனை அவதானித்து விலங்குகள ஓடிவந்து சாப்பிடும் போது வெடி வெடித்துவிடுமாம்.
அதில் நிலைதடுமாறி வாய், முகமெல்லாம் வெடித்து சிதறும்போது, அந்த விலங்குகளை எளிதாக பிடித்து கொண்டு வந்து விடுவார்களாம். அவ்வாறே இந்த நரிக்கும் வெடியை வைத்துள்ளனர்.. பசியால் வந்த நரி இந்த இறைச்சியைக் கடித்தபோது, அதிலுள்ள வெடிபொருள் வெடித்து சிதறியதில் நரியின் வாய் கிழிந்து இறந்தேவிட்டது தெரியவந்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக