கொரோனா ஊரடங்கு காரணமாக நடிகர் இர்ஃபான் கான், ரிஷி கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் சிலர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தனர். சமீபத்தில் கன்னட நடிகரும், நடிகர் அர்ஜூனின் உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணமடைந்தார்.
அந்த வகையில், தமிழ் சினிமாவில் பிரகாஷ்ராஜ் இயக்கி, அவர் நடிப்பில் வெளிவந்த தோனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் முரளி சர்மா. இத்திரைப்படத்தின் மூலம் பிரபலமான அவர் அதனை தொடர்ந்து பட்டத்து யானை, பாயும்புலி, அஞ்சான், ஆரம்பம், தேவி, கென்னடி கிளப், சாஹோ என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் ரசிகர்களை மிரள வைத்துள்ளார். முரளி சர்மா தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், முரளி சர்மாவின் தாயார் பத்மா சர்மா அவர்கள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவத்தால் முரளி சர்மாவின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
மேலும் 76 வயது நிறைந்த தாயார் பத்மா சர்மாவின் இறுதிச் சடங்குகள் நேற்று மும்பையில் நடைபெற்றது. தாயாரின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக