Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 11 ஜூன், 2020

மீண்டும் ஒரு கறுப்பின நபர் கொலை – அமெரிக்காவில் தொடரும் நிறவெறி!

அமெரிக்காவின் மினியபோலிஸ் பகுதியில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற நபர் வெள்ளையின போலிஸாரால் கொலை செய்யப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

அமரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின நபர் சாலையோரத்தில் வைத்து போலிஸாரால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அமெரிக்கா முழுவதும் போராட்டம் அதிகமாகியுள்ளது. இந்த போராட்டங்களுக்கு அமெரிக்கா மட்டுமில்லாது உலகம் முழுவதும் ஆதரவு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் 4 போலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கறுப்பின மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் மேலும் ஒரு கறுப்பின நபர் போலிஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் டேலி மெக்ளோதன் (44) என்பவருக்கும், 4 போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. அதில் அந்த 4 போலிஸாரும் கடுமையாக டேலியை தாக்குகின்றனர். கடைசியில் அவரை போலிஸ் வேனில் ஏற்றும்போது அவர் தலையில் கடுமையான காயங்களோடு இருக்கிறார். அதன் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இரண்டு நாட்களில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 4-6 ஆகிய தேதிகளில் நடந்துள்ளது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் பரவ, மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக