Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 29 ஜூன், 2020

தாய் ஒட்டகமும், குட்டி ஒட்டகத்தின் கேள்வியும்

ஒரு மாலைப்பொழுதில் தாய் ஒட்டகமும், குட்டி ஒட்டகமும் பேசிக்கொண்டிருந்தன. குட்டி ஒட்டகம் அடிக்கடி ஏதேனும் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும். அன்றைக்கும் அப்படித்தான்.

அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கிறதே ஏன்? என்று கேட்டது. தாய் ஒட்டகம், நாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள். நமக்கு தண்ணீர் பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் கிடைக்கும். தினம் தினம் கிடைக்காது. 

அதனால், கிடைக்கும் தண்ணீரை முடிந்தளவு நம் உடம்பில் சேமித்துக்கொண்டால் தண்ணீர் கிடைக்காத சமயத்தில் பாலைவனத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கு தான் இயற்கை திமிலைக் கொடுத்திருக்கு என்றது.

குட்டி ஒட்டகம், நமக்கு கண் இமை கெட்டியாக இருக்கிறது, மூக்கை மூடிக்கொள்ள மூடி இருக்கிறது? மற்ற மிருகங்களுக்கு அப்படி ஏன் இல்லை? என்று கேட்டது. 

தாய் ஒட்டகம் சொன்னது, பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும், கண்ணிற்குள்ளும், மூக்கிற்குள்ளும் மணல் புகுந்துவிடும். அதனால்தான் நமக்கெல்லாம் இப்படி மூடி இருக்கு என்றது. குட்டி, அம்மாவின் கால் குளம்பைப் பார்த்து இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதுக்கு? என்று கேட்டது. 

மணலில் நடக்கும் போது நம்முடைய கால்கள் மண்ணிற்குள் புதைந்துவிடாமல் நடப்பதற்காகத்தான் என்று பொறுமையாக பதில் சொன்னது தாய் ஒட்டகம்.

குட்டி யோசனையுடன் கேட்டது, அம்மா பல்லும், நாக்கும் இவ்வளவு கெட்டியா இருக்கிறதே அது ஏன்? என்று கேட்டது. தாய் ஒட்டகம் சொன்னது, பாலைவனத்தில் செடி கொடியெல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சுவைத்து சாப்பிட வேண்டாமா? அதற்காகத்தான் என்றது. 

இப்போது குட்டி பட்டென்று கேட்டது. அம்மா! இதையெல்லாம் வைத்துக்கொண்டு லண்டன் குளிரிலே இந்த மிருகக்காட்சி சாலையிலே நாம் இருவரும் என்ன செஞ்சுகிட்டு இருக்கோம்? என்று கேட்டதும் தாய் ஒட்டகம் பதில் பேசமுடியாமல் அமைதியாக நின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக