தூக்க மாத்திரை கொடுத்து சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பல இடங்களில் சிறுமிகள் உட்பட பலர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பெங்களூரில் உள்ள 40 வயதான ஒருவர் தனது 19 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் தனது தந்தை மற்றும் இரண்டாம் தாயுடன் வசித்து வருகிறார் 19வயதான பெண் . கடந்த செவ்வாய் கிழமை இரவு சளி தொல்லையால் அவதிப்படுவதை அடுத்து தனது தந்தையிடம் கூறியுள்ளார்.அவரும் 19 வயதான மகளுக்கு சளிக்கான மாத்திரை என்று கூறி தூக்க மாத்திரை கொடுத்துள்ளார்.காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் தனது அருகில் தந்தை படுத்திருப்பதை கண்ட அந்த பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதை உணர்ந்துள்ளார். உடனடியாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தனது இரண்டாவது அம்மாவிடம் கூறியுள்ளார். ஆனால் அவரோ அவள் கூறியதை புறக்கணித்துள்ளார். உடனே அந்த பெண் கழிவறையை சுத்தப்படுத்தும் ரசாயனத்தை குடித்து விட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார் .விஷத்தை குடித்து விட்டு நேராக காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். அதை தொடர்ந்து அந்த பெண்ணை St.Johns மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.பெண்ணின் புகாரை அடுத்து தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக