Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 29 ஜூன், 2020

சீன நிறுவனங்களுக்கு எதிராக மற்றொரு அதிரடி; ரூ. 2,900 கோடி டெண்டரை ரத்து செய்த மத்திய அரசு

கங்கை நதியில் கட்டப்படும் மகாசேது திட்டம் தொடர்பான டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த திட்டத்தில் சீன நிறுவனங்களும் ஈடுபட்டிருந்தன. இந்த திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு ஒப்பந்தக்காரர்களில் இருவர் சீன நிறுவனங்கள் என்பதால் பீகார் அரசாங்கத்தின் உயர்மட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை டெண்டரை ரத்து செய்துள்ளன.

இந்த முழு திட்டத்திற்கும் மூலதன செலவு ரூ .2,900 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 5.6 கி.மீ நீளமுள்ள பிரதான பாலம், அதில் சிறிய பாலங்கள், அண்டர்பாஸ் மற்றும் ரயில் ஓவர் அண்டர்பாஸ் ஆகியவை அடங்கும்.

ஜூன் 15 ம் தேதி கிழக்கு லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட மோதலில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் சர்ச்சை மற்றும் 20 இந்திய வீரர்களின் வீரமரணம் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் 2019 டிசம்பர் 16 அன்று மகாசேத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாட்னா, சரண் மற்றும் வைசாலி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் கங்கை நதியில் மகாத்மா காந்தி சேதுக்கு இணையாக உத்தேச மகாசேத்து திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த திட்டத்தின் படி, நான்கு அண்டர் பாஸ், ஒரு ரெயில் ஓவர் பிரிட்ஜ், 1.58 ரூட் பிரிட்ஜ், ஃப்ளைஓவர், நான்கு சிறிய பாலங்கள், ஐந்து பேருந்து நிறுத்தங்கள் மற்றும் 13 சாலை சந்திப்புகள் என மிக பிரமாண்டமாக கட்டப்பட உள்ளன. இத்திட்டத்திற்கான கட்டுமான காலம் மூன்றரை ஆண்டுகள் மற்றும் ஜனவரி 2023-க்குள் முடிக்கப்பட இருந்தது எனவும் அதிகாரிகள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக