தாகத்தோடு தண்ணீர் தேடி வந்த குரங்கின் இந்த செயலை பார்த்த வெங்கடேஸ்வர், அதைப் பிடித்து சித்திரவதை செய்து ஒரு மரக் கிளையில் தூக்கிட்டுக் கொன்றுள்ளார்.
இந்த செயலின்போது அங்கிருந்த நாய்கள், அந்த குரங்கைக் கடித்துள்ளது. இந்த செயலை அந்த நபர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டும் உள்ளார்.
மிருக குணத்தோடு செயலை வெங்கடேஸ் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்தபோது, "வெங்கடேஸ்வர் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜோசப் என்பவர்தான் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார் "என்பது தெரியவந்தது. அதாவது ஒரு குரங்கைக் கொன்றுவிட்டால், வேறு குரங்கள் இந்த பக்கம் வராது எனத் திட்டம் போட்டு இதைச் செய்ததாக அவர்கள் கூறி வருகின்றனர்.
தூக்கிட்டுக் கொன்ற அந்த குரங்கின் உடலை, வெங்கடேஸ் அங்கிருந்த நாய்களுக்கு விருந்து படைப்பதைப் போல் தூக்கி வீசியுள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தையும் உயிரிழந்த குரங்கின் நண்பர் குரங்குகள் பார்த்துக் கொண்டிருந்துள்ளது.
நாய்கள் உயிரிழந்த குரங்கின் உடலை நெருங்க முயன்றபோது அங்கிருந்த பிற குரங்குகள், அதைத் தடுத்தன. நாய்களிடமிருந்து அந்த குரங்கின் உடலைப் பிற குரங்குகள் பாதுகாத்துள்ளன.
இந்த வீடியோ பார்ப்பவர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. இந்த விவகாரம் மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் சூழலில், வனத்துறையினர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனினும் குரங்கினை சித்திரவதை செய்து கொலை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக