Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 12 ஜூன், 2020

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா ? முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்


 தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு என்று வெளியாகும் தகவல் வதந்தி என்று  முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். 
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சில தளர்வுகளுடன் தற்போது நடைமுறையில் உள்ளது.இந்நிலையில் இன்று மேட்டூர் அணையை திறந்து வைத்த பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அவர் பேசுகையில்,  தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு என்று வெளியாகும் தகவல் வதந்தி.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் வந்துள்ளது தவறான செய்தி, அதனை வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை மக்கள் அதுவும் குறிப்பாக சென்னை மக்கள் பின்பற்றினால் தொற்று பரவாது. கொரோனா தொற்று சகஜ நிலைக்கு வந்த பிறகு கல்வித்துறை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து மத்திய அரசு அறிவிக்கும் அதனை தொடர்ந்து தான் தமிழக அரசு முடிவு செய்யும்.நோயின் வீரியத்தை மக்கள் புரிந்துக் கொள்ளாதது வேதனை அளிக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!