Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 26 ஜூன், 2020

இந்த தேதி வரையில் ரயில் சேவை ரத்து.! மத்திய ரயில்வே அமைச்சகம் புதிய தகவல்.!

ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வரையில் அனைத்து விதமான பயணிகள் ரயிலும் வழக்கமான கால அட்டவணையில் இயங்காது என தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது போக்குவரத்துக்கு ஊரடங்கு தொடங்கிய காலத்திலிருந்தே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படியே ரயில் போக்குவரத்தும்  வழக்கமான கால அட்டவணையில் இயங்காமல் ரயில்சேவை நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது, ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வரையில் அனைத்து விதமான பயணிகள் ரயிலும் வழக்கமான கால அட்டவணையில் இயங்காது என தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, மெயில் , எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்கள் ஆகியவை வழக்கமான கால அட்டவணையில் வரும் ஆகஸ்ட் 12 வரையில் இயங்காது. தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் மட்டுமே அந்தந்த மாநில அரசுகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஏப்ரல் 14க்கு முந்தைய ரயில்வே முன்பதிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு,  பயண தொகையை முழுவதுமாக திருப்பி தரப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இங்க தகவலானது மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக