சென்னை வாழ் மக்களில் பெரும்பாலோர் தினமும் காலை எழுந்ததும் வாக்கிங் (நடைப்பயிற்சி) போவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அனேகமாக இவர்கள் தங்களது குடியிருப்புப் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காக்களில் 'வாக்கிங்' போவதுதான் வழக்கம்.
ஆனால், பொதுமுடக்கம் காரணமாக, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மாநகராட்சி பூங்காக்கள் அனைத்தும் மூடியே கிடக்கின்றன. இதனால் வேறு வழியில்லாமல் தங்கள் வீட்டு மொட்டை மாடியில்தான் பொதுமக்கள் தற்போது நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மாடியில் வாக்கிங் செல்வது அவ்வளவு வசதியாக இல்லை என உணர்பவர்கள், காலையில் எழுந்ததும், முகத்தில் மாஸ்க் அணிந்துக் கொண்டு தங்கள் ஏரியாவில் உள்ள தெருக்களை ஒரு ரவுண்ட் சுற்றி வருகின்றனர்.
இப்படிதான் வியாழக்கிழமை காலை வேளை, தி.நகர், கிருஷ்ணா தெருவை சேர்ந்த ஒரு நபர் சாலையில் வாக்கிங் சென்றுள்ளார். அவரை வளைத்த மாநகராட்சி அதிகாரிகள், அந்த நபருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்து, அதற்கான ரசீதையும் கொடுத்துள்ளனர்.
அந்த ரசீதில் விதிமீறல் என்ற இடத்தில் "காலை வாக்கிங் என குறிப்பிடப்பட்டுள்ளது. 'மார்னிங் வாக்கிங்' சென்ற இன்னொரு நபருக்கு மாநகராட்சி நிர்வாகம் 300 ரூபாய் அபராதம் விதித்து அதிர்ச்சி அளித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக