ஒரு பெண் சில வாரங்களில் அழகு பெறலாம் என்று விளம்பரங்களில் பார்த்திருக்க முடியும். இன்னும் கூட கிராமப்புறங்களில் பல பெண்களின் முக்கிய காஸ்மெடிக்ஸில் ஒன்றான இந்த பேர் அண்ட் லவ்லி. அதிலும் இந்தியாவில் ஆண்கள் பெண்கள் என பாகுபாடின்றி பயன்படுத்தும் ஒரு பொருளாகவும் இந்த பேர் அண்ட் லவ்லி இருந்து வருகிறது.
இது அழகை கூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் காஸ்மெடிக்ஸ் பொருட்களில் ஒன்று. இப்படி நம் உணர்வுகளோடு கலந்துள்ள இந்த பெயரில் மாற்றம் கொண்டு வரப்போவதாக ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கறுப்பு என்பது அழகு குறைவானது.
சிவப்பாக மாறுவதே அழகு எனப் பொருள் தரும்படி இருப்பதாக உள்ளதால் இந்த முடிவை ஹிந்துஸ்தான் நிறுவனம் எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பெயரை மாற்றுவதற்காக ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும், அதற்கு அனுமதி கிடைத்த பின்பே பெயரை மாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆக இந்த பெயர் மாற்றம் இன்னும் சில மாதங்களில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் இந்தியாவில் அதன் இரண்டு பொருட்களை விற்பனையில் இருந்து நிறுத்துவதாக அறிவித்த நிலையில், ஒரு வாரத்திற்கு பின்பு ஹிந்துஸ்தான் தான் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பேர் அண்ட் லவ்லி நிறுவனம் வருடத்திற்கு சுமார் 560 மில்லியன் டால்ர் மதிப்புள்ள பொருட்களை வருடத்திற்கு விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதன் பங்கு 50 - 70 சதவீத பங்கினை கொண்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2020ம் ஆண்டில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் ஒரு கொள்கையை எடுத்துள்ளது.
அழகு என்பது அனைத்தையும் உள்ளடக்கியதாக தங்களது பார்வையை மாற்றுகிறது. இதுவரை ஃபேர், வொய்ட், லைட் என்ற வார்த்தைகளே அழகு என்று அடையாளப்படுத்தப்பட்டது தவறு என்று கருதுவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் தங்களது க்ரீம் அனைத்து வகையான சருமங்களையும் கொண்டுடாடுவதாகவும், வெள்ளையான சருமம் என்பதை நீக்கிவிட்டு, தற்போது ஆரோக்கியமான சருமம் என்பதை சேர்த்துள்ளதாகவும் இந்த நிறுவனத்தின் நிர்வாகி சஞ்சீவ் மேத்தா கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக