கோடைகாலம் உச்சம் தணிந்து, மழைக்காலம் நம் கதவுகளைத் தட்டுவதால், சந்தைகள் மற்றும் சூப்பர் ஸ்டோர்களில் ஏராளமான மஞ்சள் நிறமுள்ள சதைப்பற்றுள்ள பழம் இருக்கும். அது முக்கனிகளில் ஒன்றான முதல் கனியான மாம்பழம்தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நன்கு ருசித்து சாப்பிடும் மாம்பழம் யாருக்குதான் பிடிக்காது. மாம்பழம் உலகெங்கிலும் உள்ள 'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது மிகவும் பிரபலமான சூப்பர் பழங்களில் ஒன்றாகும்.
இது பல ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் குணங்களைக் கொண்டுள்ளது என்று நம்பப்படுகிறது. பல கலாச்சாரங்களில், இது அன்பின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில், இதைச் சுற்றி ஏராளமான கட்டுக்கதைகள் இருக்கின்றன. மாம்பழங்களைப் பற்றி மக்கள் நம்பும் பல கட்டுக்கதைகள் மிகவும் பொதுவானவை. இந்த குழப்பத்தை நீக்குவதற்காக, மாம்பழத்தை பற்றிய சில கட்டுக்கதைகளும், அவற்றின் சில உண்மைகளும் இக்கட்டுரையில் காணலாம்.
கட்டுக்கதை: ஒரு மாம்பழத்தின் பழுத்த தன்மையை அதன் தோல் நிறத்தால் தீர்மானிக்க முடியும்
உண்மை: இது உண்மையல்ல. மாம்பழத்தின் தோல் நிறம் அதன் பழுத்த தன்மைக்கான நல்ல மற்றும் நம்பகமான குறிகாட்டியாக இருக்காது. அதை தொட்டு பார்ப்பதன் மூலம், அது பழமா? இல்லை காயா? என்பதை தெரிந்துகொள்ள்ளலாம். ஆனால், தோலின் நிறத்தை வைத்து தெரிந்து கொள்ள முடியாது. மேலும், பழ வாசனை ஒரு பழுத்த மாம்பழத்தின் நல்ல குறிகாட்டியாகும்.
கட்டுக்கதை: மாம்பழத்தில் வைட்டமின் ஏ மட்டுமே உள்ளது.
உண்மை: அது அப்படி இல்லை. மாம்பழம் நல்ல பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு மாம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்தின் உள்ளடக்கம் அதன் வகை மற்றும் முதிர்ச்சியைப் பொறுத்தது. இது பச்சை நிறமாக இருக்கும்போது, அதில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இது பழுக்கும்போது, வைட்டமின் ஏ அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கும். மாம்பழத்தில் பொட்டாசியம், ஃபைபர் மற்றும் வைட்டமின் பி -6 ஆகியவையும் நிறைந்துள்ளன.
கட்டுக்கதை: மாம்பழம் சாப்பிடுவது உங்களை பருமனாக ஆக்குகிறது
உண்மை: இது முழுமையான கட்டுக்கதை. மாம்பழங்கள் உங்களை குண்டாக மாற்றுவதில்லை அல்லது எடை அதிகரிப்பதை ஊக்குவிக்காது. உண்மையில், மாம்பழத்தில் கொழுப்பு இருப்பது 1 கிராம் கூட உண்மை இல்லை. இருப்பினும், மாம்பழ சுவை கொண்ட செயற்கை பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் அதிக கொழுப்புச் சத்து உள்ளது.
கட்டுக்கதை: நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்
உண்மை: நீரிழிவு நோயாளிகளுக்கு மாம்பழம் முற்றிலும் பாதுகாப்பானது. உண்மையில், ஒரு நாளைக்கு ஒரு மாம்பழம் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. மாம்பழத்தில் கிளைசெமிக் குறியீட்டின் குறைந்த உள்ளடக்கம் உள்ளது மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை சீராக்க உதவும் பிற ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகம் நிறைந்துள்ளது.
கட்டுக்கதை: மாம்பழம் முகப்பருவை ஏற்படுத்துகிறது
உண்மை: மாம்பழம் முகப்பருவை ஏற்படுத்துகிறது என்பது கட்டுக்கதை. உண்மையில், மாம்பழங்கள் முகப்பருவை ஏற்படுத்தாது. மாம்பழங்களில் கரோட்டின் மிகுதியாக உள்ளது. இது குறைபாடற்ற சருமத்திற்கு பங்களிக்கிறது. மாம்பழங்களில் உள்ள நார்ச்சத்து நச்சுப் பொருட்களால் சுமை நிறைந்த குடலை சுத்தப்படுத்துகிறது. ஆகையால், மாம்பழங்கள் முகப்பரு அல்லது தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தாது.
கட்டுக்கதை: மாம்பழம் சாப்பிடுவது உடல் வெப்பநிலையை உயர வழிவகுக்கிறது
உண்மை: இதில் கொஞ்சம் உண்மை உள்ளது. ஆனால் முற்றிலும் உண்மை இல்லை. மாம்பழங்கள் குளிர்ச்சியான பழங்கள் அல்ல என்பது உண்மைதான். ஆனால் இந்த பிரச்சினைக்கு ஒரு எளிய மற்றும் எளிதான தீர்வு உள்ளது: மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன் அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்தல். இதைச் செய்யும்போது, உடலை வெப்பமடையும் மாம்பழத்தில் உள்ள அனைத்து பைடிக் அமிலத்தையும் வெளியேற்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக