Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 10 ஜூன், 2020

கை, கால்களில் மரத்துப் போகிறதா ? இதான் கரணம்.!

தூக்கத்தில் கை மரத்து போவதற்கான காரணங்கள், தடுக்கும் முறைகள் மற்றும் குணப்படுத்தும் முறைகளைப் பற்றி காண்போம்.

நாம் தூக்கத்திலிருந்து திடீரென எழுந்தவுடன் அல்லது தூக்கத்தின்இடையிலோ நம் கைகள் மரத்து போகிற போல் அதாவது உணர்வை இல்லாதபோல் உணர்வோம். பலருக்கு கைகளில் உணர்வே இல்லாத போல இருக்கும், சில நேரங்களில் ஊசி வைத்து குத்தியது போன்று இருக்கும். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போது, அதுவும் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும்போது மரப்பதற்கான சாத்தியம் அதிகம் இருக்கிறது. ஆனால் இது தற்காலிகமானது சிறிது நேரத்தில் குணமாகிவிடும்.அதில் சில காரணங்களுக்காக நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

முள்ளந் தண்டு எலும்புகள் தேய்ந்து, முண்நாணிலிருந்து வெளியே வரும் நரம்புகளை அழுத்துவதாலும் ஏற்படும். கழுத்து எலும்புகளில் ஏற்படும் தேய்வானது கைகளில் எரிவு, மரத்தல் போன்ற அறிகுறிகளைக் கொண்டு வரும்.பொதுவாக ஒருவர் தூங்கும் பொழுது தன்னை அறியாமல் தன் கைகளின் மேல் தலையை வைத்து அழுத்தி தூங்கி விடுவார்கள். இதனால் கைகளில் உள்ள நரம்புகளுக்கு செல்லும் ரத்தம் ஓட்டம் நிறுத்தப்படுகிறது. நரம்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதால் அவை தற்காலிகமாக செயலிழக்கின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக