துருத்தி என்பதற்கு ஆற்றிடைக்குறை என்பது பொருள்.
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இத்திருக்கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் சோழ மன்னர்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
இத்தலத்தில் ஸ்ரீ சௌந்திர நாயகி,
'ஸ்ரீ சக்கர பீட நிலையாய நம’
என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம வடிவில் அமைந்துள்ளார்.
ஸ்ரீபரிமள சுகந்த நாயகி,
’பிந்து தர்பண விந்துஷ்டாயின நம'
என்ற வடிவிலும் அமைந்துள்ளார்.
பரத மகரிஷி தமக்கு குழந்தைப்பேறு வேண்டி செய்த யாகத்தில் தோன்றியவர் ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி.
தல விருட்சம் உத்தால மரம்.
இதைக் கொண்டு உத்தால வனம் எனப்பட்டது மருவி,
"குத்தாலம்"
ஆயிற்று.
வழிபட்டோர்:
அம்பாள் வழிபட்டு சிவபெருமானை,
"உத்தவேதீசுவரரரை"
திருமணம் செய்த திருத்தலம்.
பரிகாரத் திருத்தலம்:
திருமணத் திருத்தலம் என்பதால் ஸ்ரீபரிமளசுகந்த நாயகியை வழிபட திருமணத்தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்...
கொடிமர விநாயகர்:
ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால்,
கொடிமரம்,
பலிபீடம்,
நந்தியைக் காணலாம்.
கொடிமரத்தில்,
"கொடிமர விநாயகர்"
உள்ளார்.
வலப்புறம் உத்தால மரம் உள்ளது.
நந்தியைக் கடந்து உள்ளே செல்லும்போது இடப்புறம் அம்மன் சன்னதி உள்ளது.
இத்தலத்தைப்பற்றி,
"ஐயடிகள் காடவர்கோன் நாயனார் அருளிய வெண்பா பின்வருமாறு:
"வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்எ குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து - கஞ்சி அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே திருத்துருத்தியான் பாதஞ்சேர்.!"
கோயில் திறப்பு:
இக்கோயில் காலை 6 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும் - மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்:
திருத்துருத்தி குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக