செவ்வாய், 23 ஜூன், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 047

நேச நாயனார்...!

நல்லொழுக்கம் உடைய பெரியோர்கள் நிலைபெற வாழும் காம்பீலி என்னும் பழம்பதி என்ற தொன்மையான இடம் ஒன்று உண்டு. அதில் அறுவையார் குலத்தில் காளர் மரபில் செல்வமிக்க குடியில் வந்தவர் நேசர் என்பவர். அவர் சிறு வயது முதலே எம்பெருமானின் மீது மிகுந்த பக்தி கொண்டு இருந்தார். ஈசன் மீது மட்டுமல்லாமல் சிவபெருமானை வழிபடுபவர்களின் மீதும் அதிக அன்பும் கொண்டிருந்தார். அவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றிக் கொண்டும் வாழ்ந்து வந்தார்.

இவருடைய மனம் முக்காலமும் முக்கண்ணனின் மென்மலர் பாதங்களை நினைத்துக் கொண்டே இருந்தது.

நாவும், வாக்கும் திருவைந்தெழுத்து மந்திரத்தை கண நேரமும் விடாமல் உச்சரித்துக் கொண்டே இருந்தது.

அவருடைய உடலானது எம்பிரானுக்கு திருப்பணிகள் பல செய்து வந்தன.

எம்பெருமானின் மீது மிகுந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்த நேசர் எம்பெருமானை வழிபடும் அடியார்களுக்கு எவ்விதத்திலாவது உதவி செய்தல் வேண்டும் என்று எண்ணினார். எவ்விதத்தில் என்று எண்ணும்போது தாம் மேற்கொள்ளும் தொழிலின் மூலமாக அவர்களுக்கு உதவி செய்தல் வேண்டும் என எண்ணம் கொண்டு இருந்தார்.

தமது மரபின் கைத்தொழிலான நெசவுத்தொழிலை கொண்டு எம்பெருமானை வழிபடும் அடியார்களுக்கு வேண்டிய உதவியை செய்து வந்தார். சிவனடியார்களுக்கு வேண்டிய ஆடைகளை நெய்து வழங்கும் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார்.

தாம் மேற்கொள்ளும் பணிகளுக்கு இடையூறுகள் தோன்றினாலும் அவைகளை வெற்றிக்கொண்டு திருத்தொண்டு புரிந்து கண்ணுதற் பெருமானின் திருவடி நிழலை சேர்ந்தார்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்