செவ்வாய், 23 ஜூன், 2020

8-ம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

சுக்கிரன் மிகச்சிறந்த சிவபக்தர், சிவபெருமானின் அருளால் இறந்தவர்களை உயிர்பிழைக்க செய்யும் 'அமிர்த சஞ்சீவி" மந்திரத்தை கற்றவர். இவர் வெள்ளை நிறம் கொண்டவர். வெண்தாமரையுடன் கருட வாகனத்தில் வீற்றிருப்பார். மேலும் இவருக்கு முதலை வாகனமும் உண்டு.

வாகனம், ஆடைகள், ஆபரணங்கள், அலங்காரம், வாசனை திரவியங்கள், சங்கீதம், அழகு, வியாபாரம், நடனம், நடிப்பு ஆகியவற்றிற்கு சுக்கிரனே காரணம் ஆகிறார்.

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனின் தசாகாலம் நடக்கும்போது நல்லமுறையில் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய சிற்றின்ப, பேரின்பங்களுக்கு வழிவகுப்பார்.

லக்னத்திற்கு 8-ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு சுக வாழ்வு பாதிக்கும்.

8-ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

👉 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

👉 தாமதமாக திருமணம் நடைபெறும்.

👉 சந்தேக எண்ணங்களை கொண்டவர்கள்.

👉 மனைவியின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.

👉 வீடு மற்றும் வாகனம் அமைய தடை உண்டாகும்.

👉 அனைவரையும் கவரும் விதமாக பேசக்கூடியவர்கள்.

👉 நண்பர்களின் மூலம் மாற்றமான சூழல்கள் உண்டாகும்.

👉 கண்பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

👉 பணம் சார்ந்த விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.

👉 சுபர் பார்வை இருக்கும்பட்சத்தில் பலன்கள் மாற்றம் அடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்