Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 5 ஜூன், 2020

நரியிடம் ஏமாந்த ஓநாய்

நரி ஒன்று தாகத்தால் தவித்தது. தண்ணீரைத் தேடி அலைந்தது. தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்து. கிணற்றின் அருகே சென்று கிணற்றின் கயிற்றின் ஒரு முனையில் தொங்கிக் கொண்டிருந்த வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உடனே வாளி கிணற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. எப்படி வெளியேறுவது என்று யோசித்தது. மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால்தானே என்னால் மேலே போக முடியும். நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது.

அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிணற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது. அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்? எனக் கேட்டது. நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள் என்றது நரி. ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது உள்ளே போனதும் நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது. நரி மேலே வரும் போது ஓநாயைப் பார்த்தது. நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன் என்று கூறிக்கொண்டு மேலே தாவிக்குதித்துத் தப்பியோடியது. பாவம் ஓநாய் ஏமாந்து உள்ளேயே இருந்தது.

நீதி :

ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக