Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 4 ஜூன், 2020

டிக்டாக் எதிரான இந்திய செயலி: கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தே நீக்கம்., ஏன் தெரியுமா?


டிக்டாக்கில் அதிக நேரம்
டிக்டாக்கிற்கு போட்டியாக இந்திய தரப்பில் மிட்ரான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியானது தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
டிக்டாக்கில் அதிக நேரம்
இந்தியாவில் பலரும் தங்களது பெரும்பாலான நேரத்தை டிக்டாக்கில் செலவிட்டு வருகின்றனர். டிக்டாக்கில் லைக் வரவில்லை என சிலர் விபரீத முடிவுகளை எடுத்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது., அந்த அளவிற்கு டிக்டாக்கின் ரசிகர்களாக வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
மிட்ரான் என்ற புதிய இந்திய செயலி

மிட்ரான் என்ற புதிய இந்திய செயலி

இந்த நிலையில் மிட்ரான் என்ற புதிய இந்திய செயலி டிக்டாக் போட்டியாளராக உருவெடுத்தது. குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமடைந்து செயலியில் மிட்ரான் இடம்பெற்றது. ஒரு மாதத்திற்கு முன்பு வெளியிட்ட இந்த செயலியானது 50 லட்சம் பதிவிறக்கங்களை கடந்தது.
இந்தியாவில் கடும் விமர்சனங்கள்
டிக்டாக் செயலி மீது இந்தியாவில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல் கொரோனா தொற்று காரணமாக சீனாவின் பொருட்கள் மற்றும் உற்பத்தி மீது அதிருப்தி நிலை ஏற்பட்டு இருந்த நேரத்தில், டிக்டாக் எதிராக களமிறங்கிய மிட்ரானுக்கு அதிக மதிப்பீடுகள் பெற்றது.
மிட்ரான் உருவாக்கம்
இந்த செயலியானது ஐஐடி ரூர்க்கி மாணவர் சிவங்க் அகர்வால் மிட்ரான் பயன்பாட்டை உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டது. இந்த பயன்பாடானது டிக்டாக்கின் குளோன் போலவே தெரிகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. கூகுள் ப்ளே தரவரிசைப்படி இலவசமாக அணுக கிடைக்கும் சிறந்த செயலிகள் பட்டியலில் மிட்ரான் ஏழாவது இடத்தை பிடித்தது.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்
இந்த நிலையில் மிட்ரான் செயலி மே 2 ஆம் தேதி செவ்வாயன்று கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. இதுகுறித்து கூகுள் தளமோ, மிட்ரான் செயலியோ விளக்கம் ஏதும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாகவே ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம்
மிட்ரான் செயலி முன்னதாகவே தங்களது ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தால் அதை அப்படியே தொடரலாம், புதிதாக மட்டும் பதிவிறக்கம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு சிக்கல்கள் இதில் அதிகமாக இருக்கிறது என்று எழுந்த புகாரையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப் டெவலப்பர் தனியுரிமைக் கொள்கை
ஆப் டெவலப்பர் தனியுரிமைக் கொள்கையை பதிவேற்றாததால், மிட்ரான் செயலிக்கு தனியுரிமை சிக்கல்கள் உள்ளன என க்யூபாக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. க்யூபாக்ஸ் தரப்பானது பாகிஸ்தான் நிறுவனமாகும் எனவும் இந்த நிறுவனத்திடம் மிட்ரான் மூலக் குறியீடு வாங்கப்பட்டுள்ளது.
மிட்ரான் உருவாக்கிய அகர்வால்
இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக மிட்ரான் செயலியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு மிட்ரான் உருவாக்கிய அகர்வால் இந்த குறியீட்டை தனிப்பயனாக்கவோ அல்லது தனியுரிமை கொள்கையை மாற்றவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக