தேவையான பொருட்கள்:
பிரட் துண்டு - 2
கேரட் - அரை கப் (சிறிதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1
கரம் மசாலா - அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
இஞ்சி - அரை ஸ்பூன் நறுக்கியது
சீரகம் - கால் ஸ்பூன்
கொத்துமல்லி - கைப்பிடி அளவு
அரிசி மாவி அல்லது சொள மாவு - 2 மேஜைக் கரண்டி
தண்ணீர் - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
பிரட்டை சிறுசிறு துண்டுகளாக பிய்த்துப்போட்டு அதில் கேரட், வெங்காயம், பச்சை மிளகாய், கரம் மசாலா, உப்பு, இஞ்சி, சீரகம், கொத்துமல்லி ஆகியவை சேர்த்து கலக்கவும். மாவை மெதுவாக தூவி பிசையவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்து நன்கு கலந்து விடவும்.
வடை மாவு பதத்தில் வந்தவுடன், வடைகளாக தட்டவும். எண்ணெய்யை மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும். இந்த வடை வெகு விரைவில் சிவந்துபோகும். ஆதலால் கவனமாக பொரிக்கவும். சுவையான பிரட் வடை தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக