Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 23 ஜூன், 2020

அப்பாவை பார்க்கத்தான் போனேன்: நைட்டியுடன் கடத்தப்பட்ட பெண் போலீசில் பல்டி!!

கோவை, வித்யா காலனியைச் சேர்ந்த கார்த்திகேயனும் (35), திருச்சியை சேர்ந்த சக்தி தமிழினியும் காதலித்து, ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் இடையார் பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்த நிலையில், பெண்ணின் உறவினர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு, வீடு புகுந்து தமிழினியை அடித்து இழுத்துச் சென்றனர்.

நைட்டியுடன் கதறி அழுதப்படி இருந்த தமிழினியை அவரின் உறவினர்கள் இழுத்துச் சென்ற சிசிடிவி விடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கார்த்திகேயன் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த தனிப்படை போலீசார், தமிழினியை கண்டுபிடிக்க திருச்சி விரைந்திருந்தனர்.

இந்த நிலையில், தனிப்படை போலீசார் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, "தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஊருக்கு வந்துள்ளதாகவும், இரண்டு வாரத்தில் கோவைக்கு வந்துவிடுவேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

நைட்டியுடன் உறவினர்களால் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் இவ்வாறு பல்டி அடித்துள்ளதை அறிந்து, அவரது கணவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்தனர்.

உயிர் பயம் காரணமாக அவர் இவ்வாறு மாற்றி பேசுகிறாரா அல்லது உறவினர்களால் அவர் மூளை சலவை செய்யப்பட்டாரா எனப் புரியாமல், புகார் கொடுத்தவர்கள் திணறி போய் உள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக