Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 22 ஜூன், 2020

டிக்டாக்குக்குப் போட்டியாக புதிய திட்டம்!’ - களமிறங்கும் Zee5




பிரபல வீடியோ செயலியான டிக்டாக்குக்குப் போட்டியாக புதிய வசதியை தனது செயலியில் அறிமுகப்படுத்த Zee5 திட்டமிட்டிருக்கிறது. இதற்கான பீட்டா வெர்ஷன் தயாராகி இருப்பதாகவும் ஜூலையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சீனாவின் முன்னணி நிறுவனமான பைட்டான்ஸ் (Bytedance) நிறுவனத்தின் டிக் டாக் செயலி, இன்றைய சூழலில் இந்தியாவின் மிகவும் பிரபலமான செயலிகளுள் முக்கியமானது. இது சீனத் தயாரிப்பு, இதனால் உளவியல்ரீதியாகப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன என்றுகூறி அவ்வப்போது டிக்டாக்கைத் தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் #BanTikTok என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு.

அந்தவகையில் தற்போதைய சூழலில் சீனாவுக்கு எதிரான மனநிலை உருவாகியிருப்பதால், அந்தக் குரல் தற்போதும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
டிக் டாக்கில் திறமைகளை வெளிப்படுத்த நாமே ஒரு நிமிடத்திற்கான வீடியோக்களை உருவாக்கலாம். அதற்கேற்ற இசையையும் ஒலிகளையும் சேர்க்கலாம். இது பட்டிதொட்டி எங்கும் வைரலானது. கடந்த ஏப்ரல் மாதம் வரை டிக்டாக் 2 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் டிக்டாக் செயலிக்கு மாற்றாகப் புதிய திட்டத்துடன் இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமான Zee களமிறங்க உள்ளது. ஜீ நிறுவனத்தின் Zee5 செயலின் அங்கமாக ஜூலை முதல் வாரத்தில் இது வெளியிடப்படும் என நம்பப்படுகிறது. முழுக்க முழுக்க இந்திய பயனாளர்களைக் குறிவைத்து பல்வேறு புதிய அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதன் பீட்டா வெர்ஷன் வெளியாகியிருப்பதாகவும் அதன்மூலம் பயன்படுத்துதலில் இருக்கும் சின்ன சின்னக் குறைபாடுகளை அடையாளம் காணும் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது Zee5 ஓ.டி.டி தளத்துடன் இணைந்து செயல்படும் என்கிறார்கள். இதற்கு `HiPi’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. டிக்டாக்குக்குப் போட்டியாக வெளியாகும் இது, வெளியாகி இரண்டு வாரங்களிலேயே மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக