இன்றைய
காலகட்டத்தில் பெரும்பாலான ஸ்மார்ட்போன் மாடல்கள் 6' இன்ச் டிஸ்பிளே அல்லது
அதற்கும் மேலான டிஸ்பிளே அளவு கொண்ட ஸ்மார்ட்போன் மாடலாக தான் வெளிவருகிறது.
இருப்பினும், சிலர் இன்னும் சிறிய வடிவ ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கு
வலைத்தளத்தில் தேடுகிறார்கள். அப்படி, சிறிய ஸ்மார்ட்போன்களை தேடித்திரியும்
நபர்களுக்கு இந்த உலகத்தின் மிகச் சிறிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஒரு நல்ல
சாய்ஸ்.
பெரும்பாலும்
சிறிய ஸ்மார்ட்போன்களை தேடும் நபர்களுக்கு இப்போதைக்கு இருக்கக்கூடிய நல்ல சாய்ஸ்
என்றால் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ மாடலை கூறலாம். அப்படியில்லை என்றால்
பழைய ஜெனெரேஷன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல்களை வாங்கலாம். ஆனால், பழைய ஜென்
ஸ்மார்ட்போன்களை வாங்குவது என்பது நிச்சயம் ஒரு நல்ல தீர்வாக இருக்காது.
அப்படியானால்
நமக்கு ஆண்ட்ராய்டு 10 இணக்கத்துடன் கூடிய ஒரு சிறிய வடிவ ஸ்மார்ட்போன் மாடல்
வேண்டும். இதை உணர்ந்த யூனிஹெர்ட்ஸ் நிறுவனம் தற்பொழுது உலகின் மிகச் சிறிய
ஆண்ட்ராய்டு 10 இணக்கத்துடன் கூடிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த
புதிய ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஜெல்லி 2 என்று பெயரிட்டுள்ளது. இதற்கு முன்பு
2017ம் ஆண்டில் இந்நிறுவனம் ஜெல்லி என்ற சிறிய ரக போனை வெளியிட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.
உலகின்
மிகச் சிறிய 4 ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என அழைக்கப்படும் இந்த ஜெல்லி 2
ஸ்மார்ட்போன், இந்த ஜெனெரேஷன் ஆண்ட்ராய்டு அம்சங்களுடன் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் யுனிஹெர்ட்ஸ் ஆட்டம் (Atom) போன்ற சிறிய ரக
ஸ்மார்ட்போன் மாடல்களை தனது பட்டியலில் வைத்துள்ளது. இந்த புதிய ஜெல்லி 2, 4 ஜி
ஸ்மார்ட்போன் கிரெடிட் கார்டு அளவிலான ஸ்மார்ட்போன் மாடலாக களமிறங்கியுள்ளது.
இந்த
ஸ்மார்ட்போன் உலகளாவிய ரேடியோக்களை ஆதரிக்கிறது மற்றும் Android 10 இயக்க
முறைமையில் இயங்குகிறது. இதன் முன்னர் மாடலான ஜெல்லி ஸ்மார்ட்போனை விட இரண்டு
மடங்கு நீண்ட பேட்டரி ஆயுளுடன் தற்பொழுது வந்துள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது.
இதில் மேம்படுத்தப்பட்ட கேமரா அமைப்பு மற்றும் ஜி.பி.எஸ் சென்சார்கள் கூட
கொடுக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்பொழுது
இந்த உலகின் மிகச் சிறிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் 70 நாடுகளில் 30,000-க்கும்
மேற்பட்ட யூனிட்களை விற்பனைக்குத் தயார் செய்துள்ளது. விவரக்குறிப்புகளைப்
பொறுத்தவரை, யுனிஹெர்ட்ஸின் ஜெல்லி 2 ஸ்மார்ட்போன், 3' இன்ச் டிஸ்ப்ளேயுடன் 2,000
எம்ஏஎச் பேட்டரியில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் மற்றும் 16
மெகாபிக்சல் கேமராவுடன், அண்ட்ராய்டு 10 உடன் கூடிய 4 ஜி ஆதரவுடன் வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக