அமேசான் கார்ப்பரேட் ஹோல்டிங்ஸ் மற்றும் அமேசான்.காம் இன்க் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்திய வர்த்தகத்தின் விற்பனை சேவை பிரிவில் சுமார் 2,310 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகக் கார்பரேட் விவகார துறை அமைச்சகத்திற்குச் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த முதலீடு அமேசான் இந்தியாவில் தனது விற்பனையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களுக்கான சேவையை மேம்படுத்தவும் அதிகளவில் பயன்படுத்தும் எனத் தெரிகிறது.
1 பில்லியன் டாலர்
2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய ரீடைல் சந்தையில் புதிதாகப் பல நிறுவனங்கள் களமிறங்கிய நிலையில், அவர்களுடன் போட்டிப்போடும் வண்ணம் இந்திய வர்த்தகத்தில் அமேசான்.காம் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பீசோஸ் 1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்வதாக அறிவித்தார். அன்றைய மதிப்பில் 1 பில்லியன் டாலர் என்பது தோராயமாக 7,000 கோடி ரூபாய்.
திட்டம்
இந்தப் புதிய 1 பில்லியன் டாலர் முதலீட்டி்ன் மூலம் இந்தியாவில் இருக்கும் சிறு மற்றும் பெரிய வர்த்தகங்களை ஆன்லைன்-க்குக் கொண்டு வர திட்டமிட்டது அமேசான்.காம் இதன் மூலம் அமேசானின் வர்த்தகம் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டு அதிகளவிலான வர்த்தகம் பெற முடியும்.
அமேசான் இந்தியா
அமெரிக்காவில் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையைக் கொண்டு இருக்கும் அமேசான் இந்கியாவில் இதுவரையில் சுமார் 5.5 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளது. மேலும் அமெரிக்காவிற்கு அடுத்தாக இந்தியாவைத் தனது முக்கிய வர்த்தக இடமாகக் கருதுகிறது.
அமேசான் டேட்டா சேவை
இதோடு அமேசான்.இன்க் இந்தியாவில் இருக்கும் அமேசான் டேட்டா சேவை பிரிவில் சுமார் 355 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டையும் செய்துள்ளது.
இந்திய Flex திட்டம்
சமீபத்தில் அமேசான் தனது Flex திட்டத்தை நாட்டின் 35 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்கிறது. இத்திட்டத்தின் மூலம் ஒருவர் அமேசானிடம் இருந்து பொருட்களை டெலிவரி செய்து ஒவ்வொரு மணிநேரத்திற்கும் பணம் சம்பாதிக்க முடியும். தற்போது செய்யப்பட்ட முதலீடு இச்சேவைக்கும் பயன்படுத்த கூடும்.
Amazon Flex appல் பைக் வைத்துள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் பதிவு செய்து, தங்களது விருப்பமான நேரத்தில் பொருட்களை டெலிவரி செய்ய முடியும். இப்புதிய திட்டத்தில் கீழ் வேலைக்குச் சேர்வோர் மணிக்கு 120 ரூபாய் முதல் 140 ரூபாய் வரையில் சம்பாதிக்க முடியும் என அமேசான் தெரிவித்துள்ளது. இது அமெரிக்க மதிப்பில் வெறும் 2 டாலர்.
கொள்ளை அறிக்கை
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஈகாமர்ஸ் துறைக்கான கொள்கைகளை வரைமுறைப்படுத்த மத்திய அரசு 2 வருடமாகப் பணியாற்றி வரும் நிலையில், 15 பக்கம் கொள்ளை அறிக்கை வெளியிட உள்ளது. இந்தக் கொள்கை மூலம் ஈகாமர்ஸ் துறையைக் கண்காணிக்கவும், தரவுகளை மிகப்பெரிய அளவில் பயன்படுத்தி ஆய்வு செய்யும் உரிமையுடன் ஒரு கட்டுப்பாட்டு ஆணையத்தை உருவாக்க உள்ளதாகத் தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக