பெரும்பாலும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சனியின் விளைவுகளை எதிர்கொள்ளும் ஒரு காலக்கட்டம் வரும். ஏழரை சனி மற்றும் சனி மகாதசை ஆகியவை ஒரு மனிதனின் வாழ்க்கையில் தீங்கு ஏற்படுத்தும் காலங்களாகும்.
சனியின் மோசமான அமைப்பு, மனிதனை இன்னல்கள் நிறைந்த ஒரு உலகிற்குள் தள்ளும். ஆனால் ஒரு லாபகரமான அமைப்போ ஒரு மனிதனுக்கு முடிவில்லாத வளங்களையும், வெகுமதிகளையும் பெற்றுத்தரும்.
லக்னத்திற்கு 8-ல் சனி இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் துணிவு மிக்கவராக இருப்பார்கள்.
8ல் சனி இருந்தால் என்ன பலன்?
👉 உறவினர்களிடம் இருந்து விலகி இருக்கக்கூடியவர்கள்.
👉 சகோதர வகையில் சாதகமற்ற சூழல் உண்டாகும்.
👉 நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.
👉 வாக்குப்பலிதம் உடையவர்கள்.
👉 வாதாடுவதில் வல்லவர்கள்.
👉 உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.
👉 சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படக்கூடியவர்கள்.
👉 உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
👉 எதிர்பார்த்த முன்னேற்றம் சற்று காலதமதமாக கிடைக்கும்.
👉 கண்பார்வை சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும்.
👉 பலவிதமான மக்களின் தொடர்பு கிடைக்கும்.
👉 நீண்ட ஆயுளை உடையவர்கள்.
👉 புதுவிதமான சிந்தனைகளை கொண்டவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக