Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 2 ஜூலை, 2020

இந்த 4 பொருளை பால்ல கலந்து கொடுங்க! பிள்ளைக்கு எதிர்ப்பு சக்தி வேகமா அதிகரிக்கும்!

குழந்தைகள் வளரும் போதே ஆரோக்கியமாக வளர வேண்டும். ஆரோக்கியத்தோடு எல்லா பருவ காலங்களிலும் தொற்றை எதிர்த்து போராடும் அளவுக்கு எதிர்ப்புசக்தியையும் கொண்டிருக்க வேண்டும். கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் ஏற்கனவே கப நோய்கள், ஆஸ்துமா, சளி, இளைப்பு பிரச்சனை கொண்டிருக்கும் பிள்ளைகளை கூடுதலாக கவனம் எடுத்து தொற்று நேராமல் பாதுகாக்க வேண்டும். இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி மிகுந்திருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வார்கள்.
வளரும் பிள்ளைகளுக்கு எதிர்ப்பு சக்தி தரும் சத்தான உணவு பொருள்களை உணவு வழியாகத்தான் கொடுத்திட முடியும். அப்படி எளிதாக பிள்ளைகளுக்கு கொடுக்கும் முக்கிய ஊட்டச்சத்து மிக்க பானமாக பால் விளங்குகிறது. தினம் ஒரு டம்ளர் பாலில் நாம் இந்த எதிர்ப்பு சக்தி தரும் பொடியை கலந்து கொடுத்தால் பிள்ளைகளின் ஆரோக்கியம் நிச்சயம் வளமாக இருக்கும். இது குறித்து தெரிந்துகொள்வோம்.

​பால்

தினம் ஒரு டம்ளர் பசும்பால் பிள்ளையின் கால்சியம் அளவை கணிசமாக உயர்த்துகிறது. வளரும் பிள்ளைகளின் முதல் உணவு பால் தான். இயற்கை தந்த இனிய ஊட்டச்சத்து பானம் இது. பாலில் அனைத்துவிதமான அமினோ அமிலங்களும் உண்டு. புரதம் குறைவாகவும் கால்சியம் மிகுந்தும் இருக்கும் பால் உடலினுள் சென்று லாக்டிக் அமிலமாக மாறி உடல் நார்ச்சத்து உறிஞ்ச உதவுகிறது. வளரும் பிள்ளைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிக தேவையாக இருப்பதோடு எலும்பு உறுதியாக்கி எலும்பு தேய்மானத்தையும் தடுக்கிறது.

தினசரி வளரும் பிள்ளைகள் 3 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 400 மி.லி அளவு பால் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இந்த பாலில் இருக்கும் சத்துகளோடு எதிர்ப்பு சக்தி தரும் இந்த 5 பொருள்களையும் பொடியாக்கி கலந்து பயன்படுத்தினால் எதிர்ப்பு சக்தி நிச்சயம் கிடைக்கும். என்னென்ன பொருள்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

​விரலி மஞ்சள்

மஞ்சள் சிறந்த கிருமி நாசினி. மஞ்சள் ரத்தத்தை சுத்தம் செய்யும் குணம் கொண்டவை. கப நோய்களில் சளியை விரட்டி அடிக்க கூடியவை. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை கொண்டிருப்பவை. மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் பொருள்கள் புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.

மஞ்சளில் மர மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், கப்பு மஞ்சள், கறி மஞ்சள், விரலி மஞ்சள் என்று பலவைகை இருந்தாலும் சமையலுக்கு கறி மஞ்சளையே பயன்படுத்த வேண்டும். தொற்று கிருமிகளை போராடி உடலுக்கு சத்து கொடுக்க விரலி மஞ்சளை வாங்கி பயன்படுத்த வேண்டும். இந்த பொடிக்கு தேவை விரலி மஞ்சள். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விரலி மஞ்சளை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

​சுக்கு பொடி

இஞ்சியின் நன்மை குறித்து சொல்லி தெரியவேண்டியதில்லை. இஞ்சியை காயவைத்து அதன் பலன் குறையாமல் கூடுதலாகவே தருகிறது சுக்கு. உணவில் மாதம் ஒருமுறையாவது சுக்கு பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள் நம் முன்னோர்கள்.

சுக்கு வாய்வு தொல்லையையும், வயிற்று கோளாறுகளையும் சரி செய்வதோடு குளிர் காய்ச்சலை விரட்டும் குணம் கொண்டது. காரத்தன்மையும் மணமும் கொண்ட சுக்கு உடலில் வெப்பத்தை உண்டாக்கினாலும் இரைப்பு பிரச்சனையை போக்ககூடியது. மூக்கடைப்பு, ஜலதோஷத்தை போக்கும் சுக்கு.சுக்கு பொடி அல்லது சுக்கை வாங்கி மஞ்சள் தடவி சுட்டு அதன் தோலை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி பொடியாக்கவும்.

​பட்டை

இலவங்க பட்டை சிறந்த ஆக்சிஜனேற்றி. இந்த பொடியை தேநீரில் அல்லது வெதுவெதுப்பான நீரில் குடித்து வந்தாலே எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். இவை நீரிழிவு, இதய நோய், மூளை வளர்ச்சி, பற்கள் ஈறுகளுக்கு பலம் போன்றவற்றுக்கு சிறந்தது என்பதோடு வளரும் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டியவை.

உடலில் நுரையீரலில் சளி அதிகமாகும் போது பிள்ளைகள் சுவாசப்பிரச்சனைக்கு உள்ளாவதுண்டு. அடிக்கடி சளி, காய்ச்சலுக்கு உள்ளாகும் பிள்ளைகள் நுரையீரலில் அடர்த்தியான சளியை கொண்டிருக்க வாய்ப்புண்டு. அதை அவ்வபோது வெளியேற்ற பட்டை தூளையும் சேர்க்க வேண்டும். அதோடு இவை எதிர்ப்புசக்தியும் தரும் பொருள் என்பதும் கவனிக்க வேண்டியது.

மிளகு

சளி, இருமல் காலங்களில் உணவில் முதலிடம் மிளகுக்குதான். மிளகு ரசம், மிளகு சூப் என்று உணவு வழியாகவே போக்கிவிடுவோம். சிறு பிள்ளைகளுக்கு காரத்தன்மை கொண்ட மிளகை நேரடியாக தர முடியாது. ஆனால் இதன் பொடியை இலேசாக சூப்பில் கலந்து கொடுக்கலாம். இயல்பாகவே மிளகு நெஞ்சுச்சளி, நுரையீரல், ஜீரண மண்டலம் உறுப்பை சீராக்கும் தன்மையை மிளகு கொண்டிருக்கிறது.

வாணலியில் விரலி மஞ்சள் - 25 கிராம், பட்டை 25- கிராம், சுக்கு - 15 கிராம், மிளகு - 15 கிராம் அனைத்தையும் தனித்தனியாக வறுத்து இடித்து மிக்ஸியில் மைய பொடிக்கவும். வாசனைக்கு ஏலக்காய் சேர்க்கலாம். இவை செரிமானத்துக்கும் உதவும். இந்த பொடியை தினமும் பிள்ளைகளுக்கு கலந்து கொடுக்கலாம்.

மூன்று வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு கொடுக்கும் போது மூன்று சிட்டிகை அளவு சேர்த்தால் போதும். இதை வளரும் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். வயதுக்கேற்றாற் போன்று இதை அரைடீஸ்பூன் அளவு சேர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக