குறிப்பாக Oath Pro series எனும் பெயரில் தாம்சன் நிறுவனம் 43-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனங்கள் வரும் ஜூலை 5 ஆம் தேதி பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல்கள் 3840x2160 பிக்சல் திர்மானம், 4கே ஆதரவு, எச்டிஆர் 10 உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனங்கள் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் டால்பி விஷனை ஆதரிக்கின்றன எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் எம்.இ.எம்.சி, டால்பி டிஜிட்டல் பிளஸ், டால்பி விஷன், எச்டிஆர் 10, புளூடூத் 5.0, நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் மற்றும் ப்ளே ஸ்டோர் உள்ளிட்ட அனைத்து ஆதரவுகளையும் கொண்டுள்ளன இந்த புதிய தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல்கள்.
குறிப்பாக இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல்களில் கூகுள் அசிஸ்டென்ட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு நெட்ஃபிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் போன்ற அனைத்து ஸ்ட்ரீமிங் தளங்களையும் கொண்டு இந்த சாதனங்கள் வெளிவந்துள்ளது.
தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல்கள் பாரிஸில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளன இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள். மேலும் இந்த சாதனங்கள் பல விருப்பங்களுடன் எளிதான மற்றும் தொந்தரவில்லாத இணைப்பை அனுமதிக்கிறது, அதன் நுகர்வோருக்கு தடையற்ற பார்வை அனுபவத்தை அளிக்கிறது.
இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள Oath Pro series சாதனங்கள் ஸ்கிரீன் காஸ்டிங் விருப்பங்கள் கொண்டு வெளிவந்துள்ளது, இது ஆன்லைன் வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு மிக அருமையாகப் பயன்படும். மேலும் கேமிங் அனுபவத்திற்கான எச்டிஆர் 10 ஆதரவு கொண்டு இந்த சாதனங்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை,புளூடூத் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்கள்.
43-இன்ச் கொண்ட தாம்சன் OATH Pro 4கே ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.24,999-ஆக உள்ளது.
55-இன்ச் கொண்ட தாம்சன் OATH Pro 4கே ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.32,999-ஆக உள்ளது.
65-இன்ச் கொண்ட தாம்சன் OATH Pro 4கே ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.52,999-ஆக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக